உலகக் கோப்பையில் முதல் சாம்பியனும் தரவரிசையில் 14ஆவது இடத்தில் உள்ள உருகுவே அணியும், தரவரிசையில் 28ஆவது இடத்தில் உள்ள தென் கொரியா அணியும் 14ஆவது ஆட்டத்தில் மோதின. எஜுகேஷன் சிட்டி மைதானத்தில் நடந்த இந்த ஆட்டம் டிரா ஆனது.
22ஆவது உலகக் கோப்பைப் போட்டித் தொடர் கடந்த 20-ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. அடுத்த மாதம் 18 ஆம் தேதி வரை போட்டிகள் நடைபெறும். இன்று மொத்தம் 4 ஆட்டங்கள் நடைபெறுகின்றன.
பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கி நடைபெற்ற முதல் ஆட்டத்தில் சுவிட்சர்லாந்து அணி 1-0 என்ற கோல் கணக்கில் கேமரூனை வீழ்த்தியது. இதையடுத்து, 6.30 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் தென்கொரியாவும், உருகுவேயும் மோதின. இந்த ஆட்டம் டிரா ஆனது.
ஆட்டத்தின் ஆரம்பம் முதலே அனல் பறந்தது. இரு அணிகளும் அவ்வப்போது தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், மற்றொரு புறமும் இரு அணிகளும் பந்தை வலைக்குள் செல்லாமல் தடுப்பதிலும் கவனம் செலுத்தின.
மாற்று வீரர்களை களமிறக்கி மேற்கொள்ளப்பட்ட உத்திகளும் இரு அணிகளுக்கும் கடைசி வரை கை கொடுக்கவில்லை. உருகுவே அணி வீரர்கள் வசமே பந்து பெரும்பாலும் சுற்றிக் கொண்டிருந்தது.
இரு அணிகளும் தலா ஒரு முறை மஞ்சள் அட்டை எச்சரிக்கையை போட்டி நடுவரிடம் பெற்றனர்.
அதிமுறை (10 முறை) தென் கொரியா அணி, ஆட்டத்தில் தவறிழைத்தது (Fouls). உருகுவே முறை தவறிழைத்தது.
குரூப் எச் பிரிவில் நடைபெற்ற முதல் ஆட்டம் டிரா ஆன நிலையில் இரு அணிகளுக்குமே தலா 1 புள்ளி வழங்கப்பட்டது.
எஜுகேஷன் சிட்டி ஸ்டேடியம் (Education City Stadium)
இந்த ஸ்டேடியம் சுமார் 45 ஆயிரம் இருக்கை வசதிகளை கொண்டுள்ளது. பாலைவனத்தின் வைரம் என்ற அழைக்கப்படும் இங்கு 8 ஆட்டங்கள் நடக்கிறது.