FIFA WC 2022 Qatar: உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றில் இதுவரை இதுபோன்று நடந்ததில்லை!

உலகக் கோப்பைப் போட்டியில் குரூப் ஏ பிரிவில் இன்று மாலை 6.30 மணிக்குத் தொடங்கிய ஆட்டத்தில், செனகல் அணி 3-1 என்ற கோல் கணக்கில் கத்தாரை வீழ்த்தியது.

Continues below advertisement

உலகக் கோப்பைப் போட்டியில் குரூப் ஏ பிரிவில் இன்று மாலை 6.30 மணிக்குத் தொடங்கிய ஆட்டத்தில், செனகல் அணி 3-1 என்ற கோல் கணக்கில் கத்தாரை வீழ்த்தியது.

Continues below advertisement

சர்வதேச தரவரிசையில் 50-ஆவது இடத்தில் உள்ள கத்தார் அணி, 18-ஆவது இடத்தில் உள்ள செனகல் அணியை எதிர்கொண்டது. பரபரப்பான ஆட்டத்தில் மேற்கு ஆப்பிரிக்க நாடான செனகல், முதல் பாதி முடிவில் ஒரு கோல் போட்டது. அந்த அணியின் பவுலயே டியா 41ஆவது நிமிடத்தில் முதல் கோலை அடித்தார். இதையடுத்து, இரண்டாவது பாதி ஆட்டம் தொடங்கியது மீண்டும் அந்த அணி மற்றொரு கோல் அடித்தது. 

அந்த கோலை டிடியோ 48ஆவது நிமிடத்தில் வலைக்குள் செலுத்தினார். கால்பந்து பெரும்பாலும் செனகல் வசமே இருந்தது.  13 முறை கோல் அடிக்க செனகல் முயற்சி செய்தது. அதில் மூன்று முறை அந்த அணிக்கு அதிர்ஷ்டம் கிடைத்தது. அந்த அணியின் வீரர்களுக்கு 3 முறை மஞ்சள் அட்டை எச்சரிக்கை விடப்பட்டது.

கத்தார் முதல் கோல்
பல கட்ட முயற்சிகளுக்கு பிறகு கத்தார் அணி, 78-ஆவது நிமிடத்தில் ஒரே ஒரு கோலை பதிவு செய்தது.
பின்னர், செனகல் அணியின் பாம்பா டியிங் 84ஆவது நிமிடத்தில் அற்புதமான ஒரு கோலை வலைக்குள் செலுத்தி அசத்தினார். ஆட்டநேரம் முடிவில் செனகல் அணி 3-1 என்ற கோல் கணக்கில் வென்றது.
22ஆவது உலகக் கோப்பையை கோடிக் கணக்கில் செலவழித்து நடத்திவரும் கத்தார் அணி தொடக்க ஆட்டத்தில் ஈகுவடாரில் 0-2 என்ற கோல் கணக்கில் வீழ்ந்தது.

இதுவரையிலான உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றில் போட்டியை நடத்தும் ஓர் அணி குரூப் ஆட்டங்களில் அடுத்தடுத்து இரண்டு முறை தோற்பது இதுவே முதல்முறையாகும். இதன்மூலம், ஏறக்குறைய அடுத்த சுற்று வாய்ப்பு அந்த அணிக்கு மங்கியது.

குரூப் ஏ பிரிவு பட்டியில்ல கத்தார் கடைசி இடத்தில் உள்ளது. முதலிடத்தில் நெதர்லாந்தும், அதற்கு அடுத்த இடத்தில் ஈகுவடாரும் உள்ளன.

செனகல் முதல் வெற்றி
மூன்றாவது இடத்தில் செனகல் உள்ளது. அதேநேரம், செனகல் அணிக்கு இது முதல் வெற்றியாகும். நெதர்லாந்து உடனான முதல் போட்டியில் 0-2 என்ற கோல் கணக்கில் செனகல் தோல்வி அடைந்திருந்தது.
இதன்மூலம், மூன்று வெவ்வோறு உலகக் கோப்பை தொடர்களில் குரூப் ஆட்டங்களில் செனகல் ஒரு வெற்றியை ருசித்துள்ளது.

இதற்கு முன்பு கடந்த 2002-ஆம் ஆண்டு குரூப் பிரிவு ஆட்டத்தில் பிரான்ஸுடனும், 2018-இல் போலந்து அணியுடனும், இந்த முறை கத்தாருடனும் ஜெயித்துள்ளது.

ஒரே உலகக் கோப்பை தொடரில் இரண்டாவது முறையாக செனகல் அணி 3 கோல்களை ஓர் ஆட்டத்தில் பதிவு செய்துள்ளது. 2002இல் 3-3 என்ற கணக்கில் உருகுவே அணியுடன் செனகல் டிரா செய்தது. இதுவரை உலகக் கோப்பை தொடர்களில் 10 ஆட்டங்களில் விளையாடியுள்ள செனகல், இந்த முறைதான் ஒன்றுக்கு மேற்பட்ட கோல்கள் வித்தியாசத்தில் எதிரணியை வீழ்த்தியுள்ளது.

உலகின் மிகப் பெரிய விளையாட்டு திருவிழாக்களில் ஒன்றான உலகக் கோப்பை கால்பந்து போட்டி 1930-ஆம் ஆண்டு முதல் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. இரண்டாம் உலகப் போர் காரணமாக 1942 மற்றும் 1946 ஆகிய ஆண்டுகளில் மட்டும் உலகக் கோப்பை கால்பந்து போட்டி நடத்தப்படவில்லை.

கடைசியாக 2018-ஆம் ஆண்டு ரஷ்யாவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் பிரான்ஸ் சாம்பியன் பட்டம் வென்றது.
இந்தப் போட்டி டிசம்பர் 18-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. அரபு நாட்டில் நடக்கும் முதல் உலகக் கோப்பை போட்டியான இதில் 32 நாடுகளைச் சேர்ந்த கால்பந்து அணிகள் பங்கேற்றுள்ளன.

8 பிரிவுகள்
32 அணிகள் 8 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு லீக் ஆட்டங்களில் மோதுகின்றன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை லீக் ஆட்டத்தில் சந்திக்கும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் 2-ஆவது சுற்றுக்கு (ரவுண்ட்-16) முன்னேறும். 

மொத்தம் எத்தனை ஆட்டங்கள்
48 லீக் ஆட்டங்கள் உள்பட மொத்தம் 64 ஆட்டங்கள் இந்த உலகக் கோப்பைப் போட்டியில் நடைபெறுகின்றன.

 

Continues below advertisement
Sponsored Links by Taboola