குரூப் பி பிரிவில் வேல்ஸ்-ஈரான் இடையிலான ஆட்டம் இன்று அகமது பின் அலி ஸ்டேடியத்தில் நடைபெற்றது.
ஈரான் அணி முதல் லீக் ஆட்டத்தில் இங்கிலாந்திடம் 6-2 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்தது.
வேல்ஸ்-அமெரிக்கா இடையிலான ஆட்டத்தில் 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதன்மூலம் குரூப் பிரிவில் 3 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது ஈரான். இந்தத் தொடரில் வேல்ஸ் அணிக்கு இது முதல் தோல்வியாகும்.


இந்த நிலையில், தரவரிசையில் 19 ஆவது இடத்தில் உள்ள வேல்ஸ் அணி, தரவரிசையில் 20ஆவது இடத்தில் உள்ள ஈரானை இன்று சந்தித்தது. கடைசி வரை இரு அணிகளாலும் கோல் போட முடியவில்லை. இரு அணி வீரர்களுமே தடுப்பாட்டத்தில் அதிக கவனம் செலுத்தினர். சில கோல் முயற்சிகளும் தடுக்கப்பட்டன.


FIFA WC 2022 Qatar: ட்ரா ஆன ஆட்டம்.. முன்னாள் சாம்பியனை ஒரு கோல் கூட போடவிடாமல் தடுத்த தென்கொரியா!


ரெட் கார்டு
இந்த உலகக் கோப்பைத் தொடரில் முதல்முறையாக வேல்ஸ் அணியின் கோல் கீப்பர் வெய்னே ஹென்னெசிக்கு ரெட் கார்டு வழங்கப்பட்டது. அவர் ஈரான் வீரரை நோக்கி காலை தூக்கி அட்டாக்கிங் பொசிஷனில் வந்ததால் ரெட் கார்டு வழங்கப்பட்டது. இதனால், அவர் உடனடியாக அவர் மைதானத்தை விட்டு வெளியேறினார். 
அவருக்கு பதிலாக மாற்று கோல் கீப்பர் களமிறங்கினார். 


கோல்
கூடுதல் நேரத்தில் இந்த ஆட்டத்தின் முதல் கோலை ஈரான் வீரர் செஷ்மி அடித்தார்.  இதையடுத்து இரண்டாவது கோலை ரமின் அடித்தார். இதையடுத்து, வேல்ஸ் வீரர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். ஈரான் வீரர்களும், அந்நாட்டு ரசிகர்களும் உற்சாகம் அடைந்தனர்.






அகமது பின் அலி ஸ்டேடியம் (Ahmad Bin Ali Stadium)


இந்த ஸ்டேடியத்தில் 7 ஆட்டங்கள் நடக்கிறது. சுமார் 44 ஆயிரம் இருக்கைகளை கொண்டுள்ளது. இந்த ஸ்டேடியத்தின் இரு்ககைகள் உலகக் கோப்பை போட்டி முடிந்த பிறகு பாதியாக குறைக்கப்பட முடிவு செய்யப்பட்டுள்ளது.


உலகின் மிகப் பெரிய விளையாட்டு திருவிழாக்களில் ஒன்றான உலகக் கோப்பை கால்பந்து போட்டி 1930-ஆம் ஆண்டு முதல் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. இரண்டாம் உலகப் போர் காரணமாக 1942 மற்றும் 1946 ஆகிய ஆண்டுகளில் மட்டும் உலகக் கோப்பை கால்பந்து போட்டி நடத்தப்படவில்லை.


கடைசியாக 2018-ஆம் ஆண்டு ரஷ்யாவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் பிரான்ஸ் சாம்பியன் பட்டம் வென்றது.
இந்தப் போட்டி டிசம்பர் 18-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. அரபு நாட்டில் நடக்கும் முதல் உலகக் கோப்பை போட்டியான இதில் 32 நாடுகளைச் சேர்ந்த கால்பந்து அணிகள் பங்கேற்றுள்ளன.


8 பிரிவுகள்
32 அணிகள் 8 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு லீக் ஆட்டங்களில் மோதுகின்றன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை லீக் ஆட்டத்தில் சந்திக்கும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் 2-ஆவது சுற்றுக்கு (ரவுண்ட்-16) முன்னேறும். 


மொத்தம் எத்தனை ஆட்டங்கள்
48 லீக் ஆட்டங்கள் உள்பட மொத்தம் 64 ஆட்டங்கள் இந்த உலகக் கோப்பைப் போட்டியில் நடைபெறுகின்றன.