2023 ஃபிஃபா மகளிர்  உலக கோப்பை 9 வது சீசன் வருகின்ற ஜூலை மாதம் 20 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் மாதம் 20 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. உலகக் கோப்பை என்றாலே ஏதேனும் ஒரு நாடு அந்த தொடரை எடுத்து நடத்தும். ஆனால் இந்த  2023 ஃபிஃபா மகளிர் உலக கோப்பை போட்டியை ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகள் இணைந்து நடத்த உள்ளது. இதில் ஆஸ்திரேலியா ஆசிய கூட்டமைப்பிலும், நியூசிலாந்து ஓசியா கூட்டமைபிலும் அடங்கும். இந்த போட்டி 1988 முதல் 2022 ஆம் ஆண்டு வரை ஆண்கள் ஃபிஃபா  உலக கோப்பை என்ன விதிமுறைகள் பின்பற்றினார்களோ அதே விதிமுறைகளை பின்பற்றியே இந்த  2023 ஃபிஃபா மகளிர்  உலக கோப்பைக்கும் நடக்கும் என்று நிறுவாகம் அறிவித்துள்ளது.


நியூசிலாந்து மற்றும் நார்வே அணிகள் மோதும் முதல் போட்டி அக்லாந்தின் ஈடன் பார்க் ஸ்டேடியத்தில் ஜூலை 20 தேதி தொடங்குகிறது. இறுதி போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி ஒலிம்பிக் ஸ்டேடியத்தில் ஆகஸ்ட் 20 ஆம் தேதி நடைபெறும். 




ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி


ஜூலை 20 தேதி தொடங்கும் 2023 ஃபிஃபா மகளிர் உலகக் கோப்பை பெரிய அளவில் ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுப்பதற்காக அன்று இரண்டு போட்டிகளை ஃபிஃபா நிறுவனம் நடத்த முடிவு செய்துள்ளது. இதன்படி இந்திய நேரப்படி மதியம் 12:30 மணி அளவில் நியூசிலாந்து- நார்வே அணிகளுக்கு இடையே போட்டி ஆக்லாந்தின் ஈடன் பார்க் ஸ்டேடியத்திலும் , பின்னர் 3:30 மணி அளவில் ஆஸ்திரேலியா- அயர்லாந்து இடையிலான போட்டி ஆஸ்திரேலியா ஸ்டேடியத்தில்  நடைபெறும்.


பங்கேற்கும் நாடுகள்






ஃபிஃபா மகளிர்  உலக கோப்பையில் இதுவரை 24 நாடுகள் மட்டுமே விளையாடியுள்ளது. ஆனால் இந்த முறை 32 அணிகள் விளையாட ஃபிஃபா நிறுவனம் முடிவு செய்துள்ளது. 2023 ஃபிஃபா மகளிர்  உலக கோப்பை போட்டியில் விளையாடும் அணிகள் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஜப்பான், சவுத் கொரியா, சீனா, பிலிப்பைன்ஸ், வியட்நாம், ஸ்வீடன், ஸ்பெயின், பிரான்ஸ், டென்மார்க், யுனைட்டட் ஸ்டேட்ஸ், கனடா, கோஸ்டா ரிக்கா, ஜமைக்கா, சாம்பியா, மொரோக்கோ, நைஜீரியா, சவுத் ஆப்ரிக்கா, கொலம்பியா, பிரேசில், அர்ஜென்டினா, நார்வே, ஜெர்மனி, இங்கிலாந்து, இத்தாலி, நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து, அயர்லாந்து, ஹைட்டி, போர்ச்சுகல், பனாமா.


பரிசுத் தொகை


2023 ஃபிஃபா மகளிர்  உலக கோப்பையை வெல்லும் அணி நிர்வாகத்திற்கு 4,290,000 டாலரும், ஒரு வீரருக்கு 270,000 டாலர் என்று மொத்தம் 10,500,000 டாலர்கள் பரிசாக வழங்கப்படும்.இரண்டாவது பரிசை வெல்லும் நிர்வாகத்திற்கு 3,015,000 டாலரும், ஒரு வீரருக்கு 195,000 டாலர் என்று மொத்தம் 7,500,000 டாலர்கள் பரிசாக வழங்கப்படும். மூன்றாவது பரிசை வெல்லும் நிர்வாகத்திற்கு 2,610,000 டாலரும், ஒரு வீரருக்கு 180,000 டாலர் என்று மொத்தம் 6,750,000 டாலர்கள் பரிசாக வழங்கப்படும். நான்காவது பரிசை வெல்லும் நிர்வாகத்திற்கு 2,455,000 டாலரும், ஒரு வீரருக்கு 165,000 டாலர் என்று மொத்தம் 6,250,000 டாலர்கள் பரிசாக வழங்கப்படும். 5-8 ஆம் இடத்தை பிடிக்கும் நிர்வாகத்திற்கு 2,180,000 டாலரும், ஒரு வீரருக்கு 90,000 டாலர் என்று மொத்தம் 17,000,000 டாலர்கள் பரிசாக வழங்கப்படும்.9-16 ஆம் இடத்தை பிடிக்கும் நிர்வாகத்திற்கு 1,870,000 டாலரும், ஒரு வீரருக்கு 60,000 டாலர் என்று மொத்தம் 26,000,000 டாலர்கள் பரிசாக வழங்கப்படும். 17-32 ஆம் இடத்தை பிடிக்கும் நிர்வாகத்திற்கு 1,560,000 டாலரும், ஒரு வீரருக்கு 30,000 டாலர் என்று மொத்தம் 36,000,000 டாலர்கள் பரிசாக வழங்கப்படும் என்று ஃபிஃபா நிறுவனம் கூறியுள்ளது