15வது ஹாக்கி உலக கோப்பை தொடர் வருகின்ற ஜனவரி மாதம் 13 ம் தேதி தொடங்கி 29 ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த தொடரானது ஒடிசாவில் உள்ள புவனேஸ்வர் மற்றும் ரூர்கேலாவில் கோலாகலமாக அடுத்த மாதம் தொடங்க இருக்கிறது. 

இந்த உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெற இருப்பதால், சொந்த மண்ணில் எப்படியாவது கோப்பையை வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் இந்திய ஹாக்கி அணி களமிறங்கும். அதேபோல், இந்திய ரசிகர்கள் பார்வையும், ஏக்கமும் அதிகரித்துள்ளது. 16 அணிகள் பங்கேற்கும் இந்த உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி ’டி’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. இதே பிரிவில் இங்கிலாந்து, ஸ்பெயின், வேல்ஸ் போன்ற வலுவான அணிகளும் உள்ளது. 

இதையடுத்து, உலக தரவரிசையில் 6வது இடத்தை பிடித்துள்ள இந்திய ஹாக்கி அணி, வருகின்ற ஜனவரி 13ம் தேதி தனது முதல் போட்டியில் ஸ்பெயினை எதிர்கொள்கிறது.

கடந்த 2018 ம் ஆண்டு கலிங்கா ஸ்டேடியத்தில் நடந்த இறுதிப் போட்டியில் நெதர்லாந்தை வீழ்த்தி பெல்ஜியம் சாம்பியன் பட்டம் பெற்றது. 

2018 ம் ஆண்டு பங்கேற்ற இந்திய வீரர்களில் ஒரு சில வீரர்கள் மட்டும் இந்த அணியில் உள்ளனர். ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ஹாக்கி வீரர் கிரஹாம் ரீட்தான் தற்போது இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக உள்ளார். ஹர்மன்பிரீத் சிங் முதன்முறையாக உலகக் கோப்பையில் கேப்டனாக களம் இறங்குகிறார். 

இறுதிப்போட்டிக்கு தகுதி எப்படி..? 

16 அணிகள் தலா நான்கு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு குழுவிலிருந்தும் முதல் அணிகள் நேரடியாக காலிறுதிக்கு முன்னேறும். ஒவ்வொரு குழுவிலும் இரண்டாவது மற்றும் மூன்றாவது சிறந்த அணிகள் கிராஸ்-ஓவர் சுற்றில் விளையாடும், அதில் இருந்து நான்கு அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெறும். 

முழு அட்டவணை: 

அணி vs அணி தேதி நேரம்  இடம்
அர்ஜென்டினா vs தென் ஆப்பிரிக்கா 13 ஜனவரி 2023 பிற்பகல் 1:00 மணி புவனேஷ்வர்
ஆஸ்திரேலியா vs பிரான்ஸ் 13 ஜனவரி 2023 மாலை 3:00 மணி புவனேஷ்வர்
இங்கிலாந்து vs வேல்ஸ் 13 ஜனவரி 2023 மாலை 5:00 ரூர்கேலா
இந்தியா vs ஸ்பெயின் 13 ஜனவரி 2023 மாலை 7:00  ரூர்கேலா
நியூசிலாந்து vs சிலி 14 ஜனவரி 2023 பிற்பகல் 1:00 மணி ரூர்கேலா
நெதர்லாந்து vs மலேசியா 14 ஜனவரி 2023 மாலை 3:00 மணி ரூர்கேலா
பெல்ஜியம் vs கொரியா 14 ஜனவரி 2023 மாலை 5:00 புவனேஷ்வர்
ஜெர்மனி vs ஜப்பான் 14 ஜனவரி 2023 மாலை 7:00  புவனேஷ்வர்
ஸ்பெயின் vs வேல்ஸ் 15 ஜனவரி 2023 மாலை 5:00 ரூர்கேலா
இங்கிலாந்து vs இந்தியா 15 ஜனவரி 2023 மாலை 7:00 ரூர்கேலா
மலேசியா vs சிலி 16 ஜனவரி 2023 பிற்பகல் 1:00 மணி ரூர்கேலா
நியூசிலாந்து vs நெதர்லாந்து 16 ஜனவரி 2023 மாலை 3:00 மணி ரூர்கேலா
பிரான்ஸ் vs தென் ஆப்பிரிக்கா 16 ஜனவரி 2023 மாலை 5:00 புவனேஷ்வர்
அர்ஜென்டினா vs ஆஸ்திரேலியா 16 ஜனவரி 2023 மாலை 7:00 புவனேஷ்வர்
கொரியா vs ஜப்பான் 17 ஜனவரி 2023 மாலை 5:00 புவனேஷ்வர்
ஜெர்மனி vs பெல்ஜியம் 17 ஜனவரி 2023 மாலை 7:00 புவனேஷ்வர்
மலேசியா vs நியூசிலாந்து 19 ஜனவரி 2023 பிற்பகல் 1:00 மணி புவனேஷ்வர்
நெதர்லாந்து vs சிலி 19 ஜனவரி 2023 மாலை 3:00 மணி புவனேஷ்வர்
ஸ்பெயின் vs இங்கிலாந்து 19 ஜனவரி 2023 மாலை 5:00 புவனேஷ்வர்
இந்தியா vs வேல்ஸ் 19 ஜனவரி 2023 மாலை 7:00  புவனேஷ்வர்
ஆஸ்திரேலியா vs தென் ஆப்பிரிக்கா 20 ஜனவரி 2023 பிற்பகல் 1:00 மணி ரூர்கேலா
பிரான்ஸ் vs அர்ஜென்டினா 20 ஜனவரி 2023 மாலை 3:00 மணி ரூர்கேலா
பெல்ஜியம் vs ஜப்பான் 20 ஜனவரி 2023 மாலை 5:00 ரூர்கேலா
கொரியா vs ஜெர்மனி 20 ஜனவரி 2023  மாலை 7:00  ரூர்கேலா 

ஆடவர் உலகக் கோப்பை ஹாக்கி 2023க்கான இந்திய அணி

கோல்கீப்பர்கள்: கிரிஷன் பகதூர் பதக், பிஆர் ஸ்ரீஜேஷ்

டிஃபெண்டர்கள்: ஜர்மன்பிரீத் சிங், சுரேந்தர் குமார், ஹர்மன்பிரீத் சிங் (கேப்டன்), வருண் குமார், அமித் ரோஹிதாஸ் (துணை கேப்டன்), நிலம் சஞ்சீப் எக்ஸ்செஸ்

மிட்பீல்டர்கள்: மன்பிரீத் சிங், ஹர்திக் சிங், நீலகண்ட சர்மா, ஷம்ஷேர் சிங், விவேக் சாகர் பிரசாத், ஆகாஷ்தீப் சிங்

முன்கள வீரர்கள் : மந்தீப் சிங், லலித் குமார் உபாத்யாய், அபிஷேக், சுக்ஜீத் சிங்

மாற்று வீரர்கள்: ராஜ்குமார் பால், ஜுக்ராஜ் சிங்

தலைமை பயிற்சியாளர்: கிரஹாம் ரீட்

இதுவரை உலகக் கோப்பையில் இந்தியா:

இந்தியா கடைசியாக கடந்த 1975 ம் ஆண்டு மலேசியா கோலாலம்பூரில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி பட்டத்தை வென்றது. அதன்பிறகு, இந்திய ஹாக்கி அணி இதுவரை எந்தவொரு பட்டத்தை வென்றதில்லை. 

இதுவரை உலகக் கோப்பை ஹாக்கி தொடரில் இந்திய அணி மூன்று முறை பதக்கங்களை வென்றுள்ளது. கடந்த 1971 ம் ஆண்டு வெண்கலப் பதக்கத்தையும், 1975 ம் ஆண்டு பட்டத்தையும், 1973 இல் ஆம்ஸ்டெல்வீனில் வெள்ளிப் பதக்கத்தைப் பதிவு செய்தது.