FIFA WORLDCUP 2022: பிரானஸ் அணி இம்முறையும் உலக்கோப்பையை வென்றால், பிரான்சில் இன்று ஒருநாள் மட்டும் பணம் பெற்றுக்கொள்ளாமல் பாலியல் தொழில் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 


உலகக்கோப்பை கால்பந்து:


உலகக்கோப்பை கால்பந்து வந்து விட்டாலே உலகம் முழுவதும் தனிக்கொண்டாட்டம் தான். அதிலும் கால்பந்து ரசிகர்களுக்குள் தனி குஷியே ஏற்பட்டு விடுகிறது. அதிலும், 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த கால்பந்து உலகக்கோப்பை நடைபெறுவதால், ரசிகர்கள் மிகவும் வெறித்தனமான காத்திருப்புக்குப் பின்னர் களத்தில் இறங்கும் தங்களது அபிமான கால்பந்து வீரர்களுக்காக செய்யக்கூடிய விஷயங்களைப் பார்த்தால், மிகவும் பிரம்மிப்பாகவும் ஆச்சர்யமாகவும் இருக்கும். 


இறுதிப்போட்டி:


22வது உலகக்கோப்பை கால்பந்து போட்டியானது கத்தாரில் கடந்த நவம்பர் மாதம் 20ஆம் தேதி கோலாகமாக தொடங்கி நடைபெற்று இன்று அதன் இறுதிப்போட்டி நடைபெறவுள்ளது. இதில் மேஜிக்கல் மெஸ்ஸி, மெர்சல் மெஸ்ஸி என அழைக்கப்படும் அர்ஜெண்டினா அணியின் கேப்டன், நம்பிக்கை நட்சத்திரம் எனப்படும் லியோனல் மெஸ்ஸியின் அர்ஜெண்டினாவும், நடப்புச் சாம்பியன், திறமையான அணி எம்பாப்வே அங்கம் வகிக்கும் பிரான்ஸ் நேருக்கு நேர் மோதிக்கொள்ளும் இறுதிப் போட்டி இன்று இரவு 8.30 மணிக்கு நடைபெறவுள்ளது. 






இந்நிலையில் இன்றைய இறுதிப்போட்டியில் அர்ஜெண்டினா அணியை பிரான்ஸ் அணி வென்றால் இன்று ஒருநாள் மட்டும் பணம் பெற்றுக்கொள்ளாமல் பாலியல் தொழில் செய்வதாக பாலியல் தொழிலாளர்கள் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  இந்த அறிவிப்பால் கால்பந்து ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.