FIFA WORLDCUP 2022: கத்தாரில் பரவி வரும் ஃப்ளூ வைரஸால் பிரான்ஸ் அணியினர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து 2022,  இறுதிப் போட்டிக்கு வந்துவிட்டது. பிரான்ஸ் அர்ஜென்டினா அணிகள் மோதும் போட்டி நாளை லுசைல் ஐகானிக் ஸ்டேடியத்தில் நடக்கவுள்ளது. 


பிரான்ஸ் வீரர்களை தாக்கிய ஃப்ளூ


இரு அணிகளும் மிகவும் பலப்பரீட்சை நடத்தவுள்ள நிலையில், பிரான்ஸ் அணி வீரர்கள் கத்தாரில் தற்போது மிகவும் வேகமாக பரவி வரும் ஃப்ளூ வைரஸ் பரவலால் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரான்ஸ் அணியில் பாதிக்கப்பட்ட இரண்டு வீரர்கள் தயோட் உபமேகானோ மற்றும் அட்ரியன் ராபியோட்  இவர்கள் இருவரும் மொராக்கோவிற்கு எதிராக புதன்கிழமை அரையிறுதிப் போட்டியில் விளையாட மைதானத்திற்கே வரவில்லை. இருவரும் பிரான்ஸ் அணிக்காக ஒதுக்கப்பட்ட தங்கும் விடுதியிலேயே தங்கிவிட்டனர். தற்போது கிங்ஸ்லி கோமன் ஆகியோருக்கும் இந்த வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.


கடந்த இரண்டு வாரமாக மிகவும் பரவலாக பரவி வரும் இந்த ஃப்ளு வைரஸால் இதுவரை உலகம் முழுவதும் 1000 பேர் இறந்துள்ளனர். இந்த வைரஸ் பரவல் 2012ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. முதலில் இந்த வைரஸ் ஒட்டகங்களுக்கு இடையிலும், அதன் பின்னர் மனிதர்களுக்கும்பரவியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 


பின்னடைவு:


இந்த வைரஸால் பாதிக்கபப்ட்டவர்கள் அதிகப்படியான குளிரினால் அவதிப்படுவார்கள் என ஆய்வுக்குழு கூறியுள்ளது. உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டவர்களில் 80% பேர் சவுதி அரேபியாவில்தான் உள்ளனர். உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் இறுதிப் போட்டியில் களமிறங்கவுள்ள பிரான்ஸ் அணியில் உள்ள வீரர்களுக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது மிகவும் முக்கியமான பின்னடைவாக கருதப்படுகிறது. 






பிரான்ஸ் அணி...


பிரான்ஸ் கடந்த முறை கோப்பை வென்ற அணியாக மட்டுமின்றி, இந்த உலகக்கோப்பையிலும் ஒரு அதீத திறன் கொண்ட அணியாகவும் இதுவரை விளங்கியிருக்கிறது. அவர்கள் அணியின் பவர்ஃபுல் வீரர்கள் வரிசையும் அதற்கு ஒரு காரணம். போட்டியின் அரையிறுதியில் தான் அந்த அணி கொஞ்சம் தடுமாறியது. மொராக்கோவின் ஹக்கிம் ஜியேச், சோபியான் பௌஃபல் மற்றும் யூசுஃப் என் நெய்ஸ்ரி ஆகியோரின் நேரடி தாக்குதலை தடுக்க திணறுகையில் அவர்களின் டிஃபன்ஸ் திறன் குறித்த அச்சுறுத்தல் உடைக்கப்பட்டது.


கோல்டன் பூட் பந்தயம்


டிஃபன்ஸில் கோட்டை விட்டாலும், பிரான்ஸ் அட்டாகில் கூடுதல் ஆற்றல் செலுத்தி ஒருவழியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. போட்டியின் அரையிறுதியில் மொராக்கோ அணியை 2-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது. தியோ ஹெர்னாண்டஸ் மற்றும் ராண்டல் கோலோ மௌனி ஆகியோர் பிரான்ஸ் அணிக்காக கோல் அடித்தனர். மொராக்கோவுக்கு எதிராக அவர்களின் ஸ்டார் வீரர் கைலியன் எம்பாப்பே கோல் எதுவும் அடிக்காததால், டிசம்பர் 14 புதன்கிழமை கோல்டன் பூட் பந்தயம் சூடுபிடித்தது குறிப்பிடத்தக்கது. 


பிரான்ஸ் அர்ஜென்டினா அணிகள் மோதும் இறுதிப்போட்டி நாளை லுசைல் ஐகானிக் ஸ்டேடியத்தில் நடக்கிறது.