நெய்வேலியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மத்திய அமைச்சர்களிடம் பிச்சை எடுப்பதுதான் தி.மு.க.வின் சமுகநீதி என்றும், மேலும் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. -பாஜக கூட்டணி அமைக்கும் என்றும், திமுகவுடன் கூட்டணி வைத்தவர்கள் ஓட போகிறார்கள் என்றும் சி.வி.சண்முகம் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

  


என்எல்சி நிறுவனத்திற்ககு வீடு மற்றும் நிலம் வழங்கி மக்களுக்கு உரிய இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும், நிரந்திர வேலை வழங்க கோரியும், நெய்வேலி சுரங்கம் 2 முன்பு என்எல்சி நிறுவனத்தை கண்டித்தும், மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும், தமிழக அரசு கண்டித்தும் ஆர்பபாட்டத்தில் ஈடுப்பட்டனர். சொத்து வரி உயர்வு, பால்வரி உயர்வு, என விலைவாசி உயர்வு மற்றும் தமிழகத்தில் நிலவி வரும் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்தும்  அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது.


கடலூர் அதிமுக மேற்கு மாவட்டம் சார்பில் மாவட்ட செயலாளரும் புவனகரி சட்டமன்ற உறுப்பினர் அருண்மொழிதேவன் தலைமையில் -அதிமுக எம்.பி. சி.வி.சண்முகம் முன்னிலையில் இந்த ஆர்பபாட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய சிவி சண்முகம் மத்திய பாஜக அரசு சொல்லுகின்ற பணிகளை எந்தன் எதிர்ப்பும் தெரிவிக்காமல் செய்து வருகிறது. 


குறிப்பாக என்எல்சி விவகாரத்தில் ஆண்டுக்கு 2 ஆயிரம் கோடி லாபம் ஈட்டுவதாக கூறி நிலங்களை உடனே கையகப்படுத்த மத்திய அரசு உத்திரவிட்டுள்ளது அதனை தமிழக அரசு எந்த கருத்துக்களையும் தெரிவிக்காமல் செய்து வருகிறது…


டெல்லி சென்றால் திமுக அசராங்கத்தை மிகவும் இழிவாக பேசுவதாகவும், தமிழக அரசு அரசின் மத்திய அரசிடம் பிச்சை எடுப்பதாகவும் குற்றம் சாட்டினார். 


வருகின்ற நாடாளுமன்ற தேர்தலின் திமுக -பாஜக கூட்டணி அமையும், திமுகவுடன் கூட்டணி வைத்தவர்கள் ஓட போகிறார்கள் என கூறினார்.