உலகம் முழுவதும் அதிகம் பேரால் கண்டு ரசிக்கப்படும் விளையாட்டான கால்பந்து உள்ளது. கால்பந்தில் உலகக் கோப்பை போட்டிகள் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுவது வழக்கம். இந்த முறை கத்தார் நாட்டில் 22வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. கிட்டத்தட்ட இறுதி கட்டத்தை நெருங்கிவிட்டது.
அடுத்த உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் இனி 2026-ஆம் ஆண்டில் தான் நடைபெறவுள்ளன.
இந்தப் போட்டியை மெக்சிகோ, அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகள் இணைந்து நடத்தவுள்ளன. 1994ஆம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டியை அமெரிக்கா நடத்தியுள்ளது.
மெக்சிகோ 1970, 1986 ஆகிய ஆண்டுகளில் நடத்தியுள்ளது. இது மூன்றாவது முறையாகும். அதேநேரம், கனடாவுக்கு உலகக் கோப்பை கால்பந்து போட்டியை நடத்துவது இதுவே முதல் முறையாகும். அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோவின் கால்பந்து கூட்டமைப்புகள் போட்டியை நடத்துவதற்கு 2018 இல் ஏலத்தில் வென்றது. ஃபிபாவில் பெரும்பான்மையானவர்கள் மூன்று நாடுகளுக்கும் உரிமைகளை வழங்குவதற்கு வாக்களித்தனர்.
இதற்கு முன்பு 2002 ஆம் ஆண்டு தென் கொரியா மற்றும் ஜப்பான் இணைந்து உலகக் கோப்பையை நடத்தியது. மூன்று நாடுகள் உலகக் கோப்பையை நடத்துவது இதுவே முதல் முறை.
அமெரிக்காவில் 11 நகரங்களில் கால்பந்து போட்டிகள் நடைபெறவுள்ளன.
அவை பின்வருமாறு:
அட்லாண்டா: மெர்சிடிஸ் பென்ஸ் மைதானம் (இருக்கைகள்: 75,000)
பாஸ்டன்: ஜில்லட் ஸ்டேடியம் (இருக்கைகள்: 70,000)
டல்லாஸ்: AT&T ஸ்டேடியம் (இருக்கைகள்: 92,967)
ஹூஸ்டன்: NRG ஸ்டேடியம் (இருக்கைகள்: 72,220)
கன்சாஸ் சிட்டி: அரோஹெட் ஸ்டேடியம் (இருக்கைகள்: 76,640)
லாஸ் ஏஞ்சல்ஸ்: சோஃபி ஸ்டேடியம் (இருக்கைகள்: 70,000)
மியாமி: ஹார்ட் ராக் ஸ்டேடியம் (இருக்கைகள்: 67,518)
நியூயார்க்/நியூ ஜெர்சி: மெட்லைஃப் ஸ்டேடியம் (இருக்கைகள்: 87,157)
பிலடெல்பியா: லிங்கன் ஃபைனான்சியல் ஃபீல்ட் (இருக்கைகள்: 69,328)
சான் பிரான்சிஸ்கோ/வளைகுடா பகுதி: லெவிஸ் ஸ்டேடியம் (இருக்கைகள்: 70,909)
சியாட்டில்: லுமேன் ஃபீல்ட் (இருக்கைகள்: 69,000)
மெக்ஸிகோ: 3 நகரங்கள்
குவாடலஜாரா: எஸ்டேடியோ அக்ரான் (இருக்கைகள்: 48,071)
மெக்சிகோ நகரம்: எஸ்டாடியோ அஸ்டெகா (இருக்கைகள்: 87,523)
மான்டெர்ரி: எஸ்டாடியோ BBVA (இருக்கைகள்: 53,460)
கனடா: 2 நகரங்கள்
டொராண்டோ: BMO ஃபீல்டு (இருக்கைகள்: 45,500)
வான்கூவர்: BC இடம் (இருக்கைகள்: 54,500)
உலகின் மிகப் பெரிய விளையாட்டு திருவிழாக்களில் ஒன்றான உலகக் கோப்பை கால்பந்து போட்டி 1930-ஆம் ஆண்டு முதல் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. இரண்டாம் உலகப் போர் காரணமாக 1942 மற்றும் 1946 ஆகிய ஆண்டுகளில் மட்டும் உலகக் கோப்பை கால்பந்து போட்டி நடத்தப்படவில்லை.
கடைசியாக 2018-ஆம் ஆண்டு ரஷ்யாவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் பிரான்ஸ் சாம்பியன் பட்டம் வென்றது.
Ronaldo Girlfriend: "நாங்கள் தோற்கவில்லை..." போர்ச்சுக்கல் மேனஜரை வறுத்தெடுத்த ரொனால்டோ காதலி...!
இந்தப் போட்டி டிசம்பர் 18-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. அரபு நாட்டில் நடக்கும் முதல் உலகக் கோப்பை போட்டியான இதில் 32 நாடுகளைச் சேர்ந்த கால்பந்து அணிகள் பங்கேற்றுள்ளன.
8 பிரிவுகள்
32 அணிகள் 8 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு லீக் ஆட்டங்களில் மோதின. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை லீக் ஆட்டத்தில் சந்தித்தன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடித்த அணிகள் 2-ஆவது சுற்றுக்கு (ரவுண்ட்-16) முன்னேறியது.
காலிறுதியில் வென்று அரையிறுதிக்கு தகுதி பெற்ற முதல் அணியாக குரோஷியா ஆனது. அர்ஜென்டீனா, மொராக்கோ, பிரான்ஸ் ஆகிய அணிகளும் அரையிறுதிக்குத் தகுதி பெற்றன.