உலகம் முழுவதும் கிரிக்கெட் தொடருக்கு எந்த அளவிற்கு ரசிகர்கள் இருக்கிறார்களோ, அதே அளவிற்கு கால்பந்து தொடர்களுக்கு ரசிகர்கள் பட்டாளம் இருந்து வருகிறது. 


இந்த நிலையில், உலகக் கோப்பை கால்பந்து போட்டித் தொடரானது வருகின்ற 20 ம் தேதி கத்தார் நாட்டிக் தொடங்க இருக்கிறது. 32 நாடுகள் பங்கேற்க உள்ள இந்த கால்பந்து தொடர் 28 நாட்கள் ஆசியாவில் உள்ள ஒரு நாட்டில் நடைபெற இருப்பது இதுவே முதல்முறை.  இந்த உலகக்  கோப்பை தொடரில் 32 அணிகள் பங்கேற்கும் நிலையில், இவர் மொத்தம் 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, கர்த்தாரில் உள்ள 8 மைதானங்களில் போட்டிகள் நடைபெற இருக்கிறது. 


இந்த FIFA உலகக் கோப்பை பல கால்பந்து ஜாம்பவான்களுக்கு கடைசி உலகக் கோப்பையாகவும் இருக்கிறது. இந்த சூழலில், கத்தார் நாட்டில் நடைபெறும் FIFA உலகக் கோப்பை 2022 தொடருடன் ஓய்வு பெறப்போகும் முக்கியமான 5 கால்பந்து வீரர்களின் பட்டியலை இங்கே காணலாம். 


லியோனல் மெஸ்ஸி :




லியோனல் மெஸ்ஸி என்ற பெயர் உலக கால்பந்து ரசிகர்களால் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. இவர் எல்லா காலத்திலும் மிகச்சிறந்த வீரர்களில் ஒருவர். மெஸ்ஸிக்கு வயது 35 என்றாலும், இன்னும் 19 வயது இளைஞர்களை போல சிறப்பாக விளையாடி வருகிறார். இவரது வேகம் மற்றும் சுறுசுறுப்பான ஆட்டம் பார்ப்போரை எளிதில் கவரும். இந்த நிலையில், ஃபிஃபா உலகக் கோப்பை 2022 தொடர்தான் தனது கடைசி உலகக் கோப்பை தொடர் என்று லியோனல் மெஸ்ஸி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். கடந்த 2014 ஃபிபா உலகக் கோப்பை தொடரில் மெஸ்ஸியின் தலைமையிலான அர்ஜென்டினா அணி இறுதிப் போட்டிவரை சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. 


கிறிஸ்டியானோ ரொனால்டோ:




உலகின் தலைச்சிறந்த கால்பந்து வீரர்களில் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஒருவர். சமீபத்தில்தான் இவர் ஒட்டுமொத்த கால்பந்து அரங்கில் 700 கோல்களை அடித்த முதல் கால்பந்து வீரர் என்ற சாதனையை படைத்தார். அதேபோல், கடந்த உலகக் கோப்பையில் ஸ்பெயினுக்கு எதிராக ரொனால்டோ அடித்த ஃப்ரீ-கிக் கோலை யாரும் மறந்துவிட முடியாது.  போர்ச்சுகல் அணி இதுவரை ஃபிபா உலகக் கோப்பையை வென்றதில்லை என்றாலும், உலகக் கோப்பை தொடரில் போர்ச்சுகல் அணிக்காக ரொனால்டோவின் பங்கை யாராலும் மறக்க முடியாது. இந்த நிலையில், இந்த உலகக் கோப்பை தொடர்தான் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு கடைசி உலகக் கோப்பையாக இருக்கும். இதன் காரணமாக தனது போர்ச்சுகல் அணியை ரொனால்டோ எவ்வளவு தூரம் அழைத்துச் செல்வார் என்பதைப் பார்க்க ஆர்வமாக இருக்கும். 2016 இல் யூரோ கோப்பையை வென்றதே அவரது சிறந்த சர்வதேச சாதனையாக உள்ளது. 


செர்ஜியோ ராமோஸ்:




செர்ஜியோ ராமோஸ் கார்சியா ஒரு ஸ்பானிஷ் தொழில்முறை கால்பந்து வீரர் ஆவார். இவர் லிகு 1 கிளப் பாரிஸ் செயிண்ட்-ஜெர்மைன் மற்றும் ஸ்பெயின் தேசிய அணிக்காக விளையாடி வருகிறார். இதுவரை இவர் பதினாறு சீசன்கள் ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடி, இரண்டு யுஇஎஃப்ஏ ஐரோப்பிய சாம்பியன்ஷிப் பட்டங்களுடன், நான்கு யுஇஎஃப்ஏ சாம்பியன்ஸ் லீக் பட்டங்களையும், ஸ்பெயின் அணிக்காக நான்கு யுஇஎஃப்ஏ சாம்பியன்ஸ் லீக் பட்டங்களையும், ஒரு 2010 ஃபிஃபா உலகக் கோப்பையையும் வென்றார். இவருக்கும் 2022 ஃபிபா உலகக் கோப்பைதான் கடைசி உலகக் கோப்பையாக இருக்கும்.


மானுவல் நியூயர்: 






மானுவல் பீட்டர் நியூயர் ஒரு ஜெர்மன் தொழில்முறை கால்பந்து வீரர் ஆவார். இவர் சர்வதேச விளையாட்டு அரங்கில் சிறந்த கோல்கீப்பர்களில் ஒருவராக கருதப்படுகிறார். நியூயர் ஒரு "ஸ்வீப்பர்-கீப்பர்" என்று செல்லமாக அழைக்கப்படுவார். வெளியேறும் வேகம் ஆகியவை காரணமாகும். மேலும், IFFHS ஆல் 2011 முதல் 2020 வரையிலான பத்தாண்டுகளில் சிறந்த கோல்கீப்பராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2014 ஆம் ஆண்டில், லியோனல் மெஸ்ஸி மற்றும் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆகியோருக்குப் பின்னால் FIFA Ballon d'Or விருதுக்கான வாக்களிப்பில் நியூயர் மூன்றாவது இடத்தைப் பிடித்தார். அவர் UEFA ஆண்டின் சிறந்த கோல்கீப்பர் மற்றும் IFFHS உலகின் சிறந்த கோல்கீப்பர் ஆகிய விருதுகளை தலா ஐந்து முறை பெற்றார்.



லூகா மோட்ரிக்:




லூகா மோட்ரிக் ஒரு குரோஷிய தொழில்முறை கால்பந்து வீரர் ஆவார், இவர் லா லிகா கிளப் ரியல் மாட்ரிட்டின் மிட்பீல்டராகவும், குரோஷியா தேசிய அணியின் கேப்டனாகவும் உள்ளார்.
மோட்ரிக் 2018 உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு குரோஷியா அணியை அழைத்துச் சென்றார். மேலும் இவர் போட்டியின் சிறந்த வீரருக்கான கோல்டன் பால் விருதைப் பெற்றார். 2007 மற்றும் 2021 க்கு இடையில் பத்து முறை குரோஷியாவின் சிறந்த கால்பந்து வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.