உலகளவில் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட விளையாட்டாக கால்பந்து உள்ளது. உலகக்கோப்பை கால்பந்து தொடர் என்றால் உலகம் முழுவதும் கால்பந்தின் தாக்கம் அதிகளவில் காணப்படும். அரபு நாடான கத்தாரில் வரும் 20-ஆம் தேதி உலககோப்பை கால்பந்து தொடங்க உள்ளது.




இந்த நிலையில், கத்தாரில் நடைபெற உள்ள உலகக்கோப்பை கால்பந்து தொடரின் தூதர் காலித் சல்மான் ஜெர்மன் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் பேசிய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவர் அளித்த பேட்டியில், “ அவர்கள் எங்களது விதிகளை ஏற்றுக்கொள்வார்கள் என்று நம்புகிறோம். தன்பாலின சேர்க்கை என்பது ஹராம் (தடை). உங்களுக்கு ஹராம் என்பதன் அர்த்தம் தெரியுமா..? நான் கண்டிப்பான இஸ்லாமியர் கிடையாது. ஆனால், தன்பாலின சேர்க்கை ஏன் ஹராம் என்று கூறப்படுகிறது என்றால், அது மூளையை பாதிக்கிறது.” இவ்வாறு அவர் கூறினார்.


அவரது பேட்டி நேரலையில் ஒளிபரபப்பாகி கொண்டிருந்தபோது, அவரது பேச்சு சர்ச்சையை ஏற்படுத்திய காரணத்தால் அவரது பேட்டி உடனே ஒளிபரப்புவது நிறுத்தப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக பேசியுள்ள பிஃபா அனைவரையும் உலககோப்பைக்கு வரவேற்கிறது என்று கூறியுள்ளது. கத்தார் நாட்டில் வரும் 20-ந் தேதி உலககோப்பை கால்பந்து தொடருக்காக, அந்த நாடு முழுமூச்சில் ஆயத்தமாக தயாராகி வருகிறது.




நடப்பு கால்பந்து தொடரில் மொத்தம் 32 நாடுகள் பங்கேற்க உள்ளன. இதற்காக முன்னணி நாடுகள் உள்பட அனைத்து நாடுகளும் தீவிரமாக பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது, காலித் சல்மானின் பேச்சு சர்ச்சையானதைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் அவரது பேச்சுக்கு கடும் கண்டனம் குவிந்து வருகிறது.


மேலும் படிக்க : FIFA World Cup 2022 : FIFA உலகக்கோப்பை 2022.. கோப்பையை கைப்பற்ற வாய்ப்புள்ள 5 அணிகள்..


மேலும் படிக்க : FIFA World Cup Champions List : உலகக்கோப்பை கால்பந்து: மகுடம் சூடியவர்கள் யார் யார் தெரியுமா? முழு பட்டியல்..