தமிழ் சினிமாவின் ஒரு வித்தியாசமான இயக்குனர்களில் ஒருவரான சீனு ராமசாமியின் அடுத்த புதிய படைப்பு 'இடி முழக்கம்' மிகவும் மும்மரமாக தயாராகி வருகிறது. ஜி.வி. பிரகாஷ், காயத்ரி சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மக்களின் வாழ்வாதாரத்தை மையமாக வைத்து படமாக்குவதில் கைதேர்ந்தவரான இயக்குனர் சீனு ராமசாமி தன்னுடைய அனைத்து படங்களிலும் ஏதாவது ஒரு மெசேஜ் சொல்ல தவற மாட்டார். அந்த வகையில் இப்படம் ஒரு கிராமத்து பின்னணியில் வழக்கம் போல இல்லாமல் கொஞ்சம் ஆக்ஷன் கலந்த திரில்லர் படமாக இது உருவாக்கப்பட்டுள்ளது என கூறப்படுகிறது.   


 



 


ஜி.வி. பிரகாஷை பாராட்டிய சீனு ராமசாமி :


ஸ்கைமேன் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பில் கலைமான் தயாரித்துள்ள இப்படத்திற்கு இசையமைக்கிறார் யுவன் ஷங்கர் ராஜா. இப்படம் குறித்து இயக்குனர் கூறுகையில் 'மனிதர்கள் மற்றவர்களின் அன்பை புரிந்து கொள்வதுடன் வாழ்க்கை மீது ஒரு நம்பிக்கையை பிறக்க செய்யும்' என்கிறார் இயக்குனர் சீனு ராமசாமி. நீண்ட நாட்களாகவே ஜி.வி. பிரகாஷை வைத்து ஒரு படம் எடுக்க வேண்டும் என்ற ஒரு சிந்தனை இருந்தது. அவரின் நடிப்பு நன்கு மெருகேறி உள்ளது. கவனத்தை சிதறவிடாமல் சொல்வதை மிகவும் அசால்ட்டாக நடித்து விடுகிறார்.  நடிப்பு அவருக்கு பழகி போய்விட்டது. கடினமான உழைப்பாளி. கனகச்சிதமாக இடி முழக்கம் படத்தின் கதாபாத்திரத்திற்கு பொருந்தி விட்டார் ஜி.வி. பிரகாஷ்' என அவருடன் பணிபுரிந்த அனுபவம் குறித்து தெரிவித்துள்ளார் இயக்குனர் சீனு ராமசாமி.


 






 


புகைப்படங்களை வெளியிட்ட படக்குழுவினர் :


இடி முழக்கம் படத்தின் மூலம் நடிகர் ஜி.வி. பிரகாஷுக்கு தேசிய விருது கிடைக்க வாய்ப்பு உள்ளது என கூறியுள்ளார் இயக்குனர். விஜய் சேதுபதிக்கு 'மக்கள் செல்வன்' என பெயர் சூட்டிய சீனு ராமசாமி ஜி.வி. பிரகாஷுக்கு 'வெற்றி தமிழன்' என பெயர் சூட்டப் போவதாகவும் தெரிவித்துள்ளார். இப்படம் நிச்சயமாக மக்களை சென்றடையும் என்றார். படப்பிடிப்பு முழுவதுமாக முடிவடைந்த நிலையில் டிசம்பர் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.  இடி முழக்கம் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்து சில அருமையான புகைப்படங்களை சோசியல் மீடியா மூலம் வெளியிட்டுள்ளனர் படக்குழுவினர்.