கத்தாரில் நடந்து வரும் கால்பந்து உலகக் கோப்பை போட்டி இன்று அதாவது டிசம்பர் 18ஆம் தேதி தோஹாவில் உள்ள லுசைல் ஸ்டேடியத்தில் அர்ஜென்டினா மற்றும் பிரான்ஸ் அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டியுடன் முடிவடைகிறது.
இந்த முடிவுநாளில் உலகக்கோப்பை கால்பந்து நிறைவு நாள் கொண்டாட்டம் நடைபெறவுள்ளது. இந்த கொண்டாட்டம் இறுதிப் போட்டி தொடங்குவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்னதாக நடக்கவுள்ளது. உலகக்கோப்பை கால்பந்து உலகம் முழுவதும் உள்ள மக்களை இணைத்துள்ளது என கத்தார் நாட்டு நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த இறுதி கொண்டாட்டத்தில் உலகம் முழுவதும் உள்ள பல்வேறு கலைஞர்கள் பங்குபெறவுள்ளனர்.
பிரபலங்கள்...
குறிப்பாக இந்த இறுதி நாள் கொண்டாட்டத்தில் "இறுதி விழா 15 நிமிடங்கள் நீடிக்கும், மேலும் 29 நாட்களுக்கு கவிதை மற்றும் இசை மூலம் உலகம் ஒன்றிணைவதைக் குறிக்கிறது" என ஃபிபா குறிப்பிட்டுள்ளது. பால்கீஸ், ரஹ்மா ரியாட் மற்றும் மானால் போன்ற உலக நட்சத்திரங்களுடன் இணைந்து மேடையில் கலக்கிய பாலிவுட் நட்சத்திரமான நோரா ஃபதேஹியுடன் இந்திய ரசிகர்களுக்குப் பழக்கமான இசையுடன் இந்த இறுதிவிழா அமையவுள்ளது.
நைஜீரிய பாடகர் டேவிடோவும் கத்தாரின் சொந்த ஆயிஷாவும் ‘(ஹய்யா ஹய்யா) பெட்டர் டுகெதர்’ பாடுவார்கள், அதே சமயம் புவேர்ட்டோ ரிக்கன் நட்சத்திரம் ஓசுனா மற்றும் காங்கோ ராப்பர் கிம்ஸ் ஆகியோர் அதிகாரப்பூர்வ உலகக் கோப்பை ஒலிப்பதிவின் மற்றொரு ஹிட் பாடலான அர்போவை இசைக்கவுள்ளனர். மேலும் இதனுடன் இந்த உலகக்கோப்பை கால்பந்துக்கான தீம் பாடலான “ லைட் த் ஸ்கை” என்ற பாடலும் அரகேற்றபப்டவுள்ளது.
லைவ் ஸ்ட்ரீமிங்...
இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு இந்த நிகழ்வு தொடங்கப்படவுள்ளது. உலகக் கோப்பை 2022 நிறைவு விழா இந்தியாவில் Sports18 மற்றும் Sports18 HD TV சேனல்களில் நேரடியாக ஒளிபரப்பப்படும், அதே நேரத்தில் ஜியோ சினிமா ஆப் மற்றும் இணையதளத்தில் லைவ் ஸ்ட்ரீமிங் இலவசமாக பார்க்கலாம்.
உலக சாம்பியன்..
இந்த இறுதி நாள் கொண்டாட்டத்துக்குப் பின் நடக்கவுள்ள இறுதிப் போட்டி உலகக்கோப்பை சாம்பியன் யார் என்பதை முடிவு செய்யும் போட்டியாக அமையவுள்ளது.ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து 2022, இறுதிப் போட்டிக்கு வந்துவிட்டது. பிரான்ஸ் அர்ஜென்டினா அணிகள் மோதும் போட்டி நாளை லுசைல் ஐகானிக் ஸ்டேடியத்தில் நடக்கிறது. நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் உலகக்கோப்பை போட்டியில் அர்ஜென்டினா ஜெர்சியை லியோனல் மெஸ்ஸி கடைசியாக அணியப்போகிறார்.
உலகக் கோப்பையை வெல்வதற்கு மெஸ்ஸிக்கு கிடைத்த இறுதி வாய்ப்பு இதுதான். எல்லா விருதுகளும் கோப்பைகளும் குவித்து விட்ட அவருக்கு இன்னும் எட்டாக்கனியாக உள்ள இதனை பூர்த்தி செய்து உச்சகட்ட மகிழ்வுடன் விடை பெறுவார் என்று உலக கால்பந்து ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர் இப்படியான எதிர்பார்ப்பு ஒருபுறம் எகிறிக்கொண்டு இருக்க மூன்றாவது இடத்துக்கான போட்டி இன்று நடைபெறவுள்ளது.
மூன்றாவது இடம் யாருக்கு?
இந்த போட்டியில், குரூப் எஃப்-இல் இடம் பெற்ற அணிகளான குரோஷியவும் மொரோக்கோவும் மோதவுள்ளன என்பது ஆச்சர்யம் அளிப்பதாக உள்ளது. இதில் லீக் போட்டியில் மொரோக்கோ அணியும் குரோஷிய அணியும் மோதியதில், இரு அணிகளும் கோல் எடுக்காததால் போட்டி டிராவில் முடிந்தது. அதேபோல், அரையிறுதி ஆட்டம் வரை மொரோக்கோ அணி தோல்வியை சந்தித்ததில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.