22வது உலகக் கோப்பை கால்பந்து திருவிழா கத்தார் நாட்டில் தொடங்கி நடைபெற்று வருகிறது. காலிறுதிக்கு தகுதி பெறும் 2ஆவது சுற்று ஆட்டத்தில் இன்று மொராக்கோ, ஸ்பெயின் அணிகள் மோதுகின்றன.


இதுவரை நெதர்லாந்து, அர்ஜென்டினா, குரோஷியா, பிரேசில், இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய அணிகள் காலிறுதிக்குள் நுழைந்தது. இதில் இங்கிலாந்து-பிரான்ஸ், குரோஷியா-பிரேசில், நெதர்லாந்து-அர்ஜென்டினா ஆகிய அணிகள் காலிறுதியில் போட்டியிடவுள்ளன.


மொராக்கோ-ஸ்பெயின் ஆகிய அணிகள் இரண்டாவது முறையாக உலகக் கோப்பை போட்டியில் மோதவுள்ளது.


இதற்கு முன்பு கடந்த 2018ஆம் ஆண்டு குரூப் சுற்றில் விளையாடியது. அந்த ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது. மொராக்கா அணியுடன் ஸ்பெயின் மோதிய இதர 3 ஆட்டங்களில் இரண்டில் வெற்றியும், ஒரு ஆட்டத்தில் டிராவும் செய்துள்ளது.


2018 உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் ஸ்பெயின் அணி இரண்டாவது சுற்றுடன் வெளியேறியது. இரண்டாவது சுற்றில் போட்டியை நடத்திய ரஷ்யாவுடன் மோதியது. ஆட்ட நேர முடிவில் 1-1 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது.


மொரோக்கா இதற்கு முன்பு
இரண்டாவது சுற்றான காலிறுதிக்கு முந்தைய நாக்-அவுட் சுற்றில் மொரோக்கான அணி இரண்டாவது முறையாக தகுதி பெற்றுள்ளது. ஸ்பெயின் அணியைப் பொருத்தவரை உலகக் கோப்பை தொடரில் மொராக்கா அணியை நாக் அவுட் சுற்றில் சந்திப்பது இதுவே முதல் முறையாகும்.


நடப்பு உலகக் கோப்பை தொடரில் மொரோக்கா இதுவரை தோல்வியே சந்திக்கவில்லை. குரூப் சுற்று ஆட்டத்தில் குரோஷியாவுக்கு எதிரான ஆட்டத்தில் டிரா செய்தது. பெல்ஜியத்துக்கு எதிரான ஆட்டத்தில் 2-0 என்ற கோல் கணக்கிலும், கனடாவுக்கு எதிரான ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கிலும் மொராக்கோ வெற்றி பெற்றது.


ஸ்பெயின் அணியைப் பொருத்தவரை குரூப் சுற்றில் கோஸ்டா ரிகா அணி 7-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றியுடன் தொடங்கியது. ஜெர்மனியுடனான ஆட்டத்தை டிரா செய்தது. ஜப்பானுக்கு எதிரான ஆட்டத்தில் 1-2 என்ற கோல் கணக்கில் தோல்வியைச் சந்தித்தது.






தரவரிசையில் 7ஆவது இடத்தில் உள்ள ஸ்பெயின் அணிக்கு 22 ஆவது இடத்தில் உள்ள மொராக்கோ அணி சவால் அளிக்குமா என்பதை பார்ப்போம்.


குரூப் சுற்றில் பட்டியலில் டாப் 2 இடங்களைப் பிடித்த அணிகள் காலிறுதிக்கு முந்தைய சுற்றான நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறியது. நாக்-அவுட் சுற்றின் முதல் ஆட்டம் கடந்த 3-ஆம் தேதி நடந்தது. அந்த ஆட்டத்தில் சர்வதேச தரவரிசையில் 8-ஆவது இடத்தில் உள்ள நெதர்லாந்து அணி, தரவரிசையில் 16-ஆவது இடத்தில் உள்ள அமெரிக்காவை எதிர்கொண்டது.


மூன்று முறை பைனலுக்கு முன்னேறியுள்ள நெதர்லாந்து அணி அந்த ஆட்டத்தில் அசத்தலாக 3 கோல்களை பதிவு செய்தது. அமெரிக்காவால் 1 கோலை மட்டுமே வலைக்குள் செலுத்த முடிந்தது. இதனால், காலிறுதிக்குள் நுழைந்த முதல் அணியாக நெதர்லாந்து தேர்வானது. அதேநாளில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா மோதின.


இந்த ஆட்டத்தில் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி 2-1 என்ற கோல் கணக்கில் அசத்தல் வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்த இரண்டாவது அணியானது.


22வது உலகக் கோப்பை கால்பந்து திருவிழா கத்தார் நாட்டில் தொடங்கி நடைபெற்று வருகிறது. காலிறுதிக்கு தகுதி பெறும் 2ஆவது சுற்று ஆட்டத்தில் நேற்றிரவு ஜப்பானும், குரோஷியாவும் மோதியது. இதில் குரோஷியா வெற்றி பெற்று காலிறுதிக்குத் தகுதி பெற்றது.