ஜூனியர் மகளிர் உலகக்கோப்பை கால்பந்து தொடருக்கான அணிகள் மற்றும் போட்டிகளின் விவரங்கள் வெளியாகியுள்ளது. 


இந்தியாவில் வரும் அக்டோபர் 11 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை 17 வயதுக்குட்பட்டவர்களுக்கான ஜூனியர் மகளிர் உலகக்கோப்பை கால்பந்து தொடர் நடைபெறவுள்ளது.  நான்கு ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் இந்த தொடருக்கான போட்டிகள் புவனேஷ்வர், கோவா மற்றும் நவி மும்பையில் நடைபெறுகிறது. மொத்தம் 16 அணிகள் பங்கேற்கும் இப்போட்டித் தொடருக்கான டிரா வெள்ளிக்கிழமை சூரிச்சில் உள்ள ஃபிபா தலைமையகத்தில் நடைபெற்றது.


ஃபிபா கூட்டமைப்பைச் சேர்ந்த இரண்டு அணிகள் ஒரே குழுவில் இல்லை என்பதை உறுதி செய்யும் வகையில் மொத்தமுள்ள 16 பணிகள் 4 குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்த முறை போட்டியை நடத்தும் வாய்ப்பு முதல் முறையாக இந்தியாவுக்கு கிடைத்துள்ளது. இதுவரை நடைபெற்ற இந்த தொடரில் 6 தொடர்களிலும் போட்டியை நடத்தும் வாய்ப்பை பெற்ற நாடுகள் அரையிறுதியை எட்டாமல் குரூப் சுற்று போட்டிகளிலேயே தோற்று வெளியேறியுள்ளது. 






அந்த மோசமான வரலாற்றை இந்தியா இம்முறை மாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு குழுவிலும் முதல் 2 இடங்களுக்குள் வரும் அணி காலிறுதிக்கு தகுதி பெறும். இதுவரை நடந்துள்ள 6  ஜூனியர் மகளிர் உலக்கோப்பை தொடரிலும் விளையாடிய ஒரே அணியான ஜெர்மனி நைஜீரியா, சிலி மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகளுடன் பி பிரிவில் இடம் பெற்றுள்ளது. சி குழுவில் ஸ்பெயின், கொலம்பியா, சீனா மற்றும் மெக்சிகோ ஆகிய அணிகள் உள்ளது. 


ஜப்பான், டன்ஸானியா, பிரான்ஸ், கனடா ஆகிய அணிகள் குரூப் டி பிரிவில் உள்ளது. ஆனால் போட்டியை நடத்தவுள்ள இந்தியா, பிரேசில், மொராக்கோ மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுடன் இணைந்துள்ளது. இதன்மூலம் இந்தியாவுக்கு இந்த தொடர் மிகக் கடினமாக இருக்கும் என கூறப்படுகிறது. 


புவனேஸ்வரில் உள்ள கலிங்கா மைதானத்தில் அக்டோபர் 11ஆம் தேதி அமெரிக்காவுடனும், 14ஆம் தேதி மொராக்கோவுக்கு எதிராகவும், அக்டோபர் 17 ஆம் தேதி பிரேசிலுக்கு எதிராகவும் இந்தியா விளையாடவுள்ளது. கடந்த 2008 ஆம் ஆண்டு தொடங்கிய ஃபிபா ஜூனியர் மகளிர் உலக்கோப்பை கால்பந்து தொடரை 2020 ஆம் ஆண்டு நடத்தும் வாய்ப்பு இந்தியாவுக்கு வழங்கப்பட்டது.ஆனால் கொரோனா தொற்று காரணமாக இந்த முடிவு ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண  


இதேபோல் ஜப்பான், டன்ஸானியா, பிரான்ஸ், கனடா ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளது. போட்டியை நடத்தவுள்ள இந்தியா