உலக ரேபிட் செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் சென்னையைச் சேர்ந்த சவிதா ஸ்ரீ வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். 


’FIDE world rapid championship’ போட்டியின் மகளிர் பிரிவு போட்டியில் பங்கேற்ற முதல் முறையிலேயே வெண்கலம் வென்றுள்ளார் சவிதா ஸ்ரீ. இந்தத் தொடரில் பதக்கம் வென்றுள்ள மூன்றாவது இந்தியர் என்ற பெருமைக்குச் சொந்தக்காரர் சவிதா ஸ்ரீ. 


சவிதா ஸ்ரீ வெற்றி: 


இந்தத் தொடரில் சவிதா ஸ்ரீ 36 -வது இடத்தில் இருந்தார். 11 சுற்றுகளில் எட்டு புள்ளிகளுடன் இருந்தவர்.  எட்டாவது சுற்றில் 6.5 புள்ளிகளுடன் இருந்தவர் 1.5 புள்ளிகள் எடுத்து வெற்றி வாகை சூடினார். 


15 வயதாகும் சுவிதா ஒன்பதாவது சுற்றில் முதல்  இரண்டு இடங்களைப் பிடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. சிங்கப்பூரின் Qianyun Gong மற்றும் கஜகஸ்தானின் Dinara Saduakassova ஆகியோரை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்குள் நுழைந்தார். 


சூப்பர் டை- பிரேக் புள்ளிகள் மூலம் வெண்கலப்பதக்கம் வென்றார் சுவிதா ஸ்ரீ. இந்தத் தொடரில் தொடர்ந்து நான்கு வெற்றிகளை சவிதா பெற்றிருக்கிறார். 


சீன வீராங்கனை Tan Zhongyi தங்கம் வென்றார். இந்தியாவில் இருந்து ஐந்து வீராங்கனைகள் இந்தத் தொடரில் பங்கேற்றனர். 


செஸ் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் வாழ்த்து:


சவிதாவிற்கு இந்திய செஸ் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். 






அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “ சவிதா தனது முதல் தொடரிலேயே வெற்றி பெற்றுள்ளார். பல சாதனைகளை புரிய அவரிடமும் தைரியமும் மற்றும் உத்வேகம் உள்ளது. சவிதா ஸ்ரீ பயிற்சியாளருக்கு என் வாழ்த்துகள்.” என்று கூறியுள்ளார். 


ஆர். பி. ரமேஷ் சவிதாவின் பயிற்சியாளர். சவிதா ஸ்ரீ திறமையான விளையாட்டு வீராங்கனையாக உருவாக பயிற்சியாளர் உறுதுணையாக இருந்திருப்பது பெருமைக்குரியதாகும்.  சவிதா ஸ்ரீ சென்னையைச் சேர்ந்தவர் என்பது கூடுதல் பெருமை.