உலகக் கோப்பை செஸ் போட்டியில் ஃபேபியானோ கருவானா - பிரக்ஞானந்தா இடையே இன்று ரேபிட் முறையில் போட்டிகள் நடைபெறுகிறது. நேற்று நடந்த இரண்டாவது அரையிறுதி போட்டியும் டிராவில் முடிந்ததால் ரேபிட் முறையில் போட்டிகள் நடக்கின்றன. இந்த ரேபிட் முறையில் நடக்கும் போட்டிகளும் டிராவில் முடிந்ததால் பிளிட்ஸ் முறைப்படி போட்டிகள் நடைபெறும். 


FIDE செஸ் உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியின் இரண்டாவது ஆட்டத்தை நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஃபேபியானா கருவானாவுக்கு எதிராக தமிழக வீரர் பிரக்ஞானந்தா டிரா செய்தார். 






இரண்டு ஆட்டங்கள் கொண்ட தொடரை 1-1 என்ற கணக்கில் 18 வயதான பிரக்ஞானந்தா மற்றும் அமெரிக்காவின் கருவானா இடையேயான போட்டி சமனானது. இதையடுத்து, உலகின் நம்பர் 1 வீரரான மேக்னஸ் கார்ல்சனுக்கு எதிரான இறுதிப்போட்டிக்கு தகுதிபெறுவார்கள் என்று முடிவு செய்ய இந்த இரண்டு வீரர்களும் இன்று நடைபெறும் டை- பிரேக்கில் பங்கேற்கின்றனர். 


தமிழக வீரர் பிரக்ஞானந்தாவுக்கும், உலகின் 3வது இடத்தில் உள்ள கருவானா இடையிலான ஆட்டம் 47 நகர்தலுக்குப் பிறகு டிராவில் முடிந்தது. 


இறுதிப்போட்டியில் கார்ல்சன்:


முதல் அரையிறுதி போட்டியின் முதல் ஆட்டத்தில் வெற்றிபெற்ற கார்ல்சன், அஜர்பைஜானின் நிஜாத் அபாசோவுக்கு எதிராக 74 நகர்த்தல்களில் டிரா செய்து இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இதன்மூலம், நார்வே வீரர் ஒருவர் FIDE செஸ் உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறுவது இதுவே முதல் முறை.






சென்னையைச் சேர்ந்த பிரக்ஞானந்தா, இந்தியாவுக்காக புதிய வரலாறு படைத்துள்ளது. FIDE செஸ் உலகக் கோப்பை அரையிறுதிக்கு முன்னேறியதன் மூலம், கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்துக்குப் பிறகு, செஸ் உலகக் கோப்பையில் அரையிறுதிக்கு சென்ற இரண்டாவது இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.