44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் வரும் 28ஆம் தேதி முதல் மாமல்லபுரத்தில் தொடங்குகின்றன. முதல் முறையாக இந்தியாவில் செஸ் ஒலிம்பியாட் நடைபெற உள்ளதால் உலகம் முழுவதும் ஊற்று நோக்கி பார்த்து வருகின்றனர். 


இந்நிலையில் முதல் முறையாக செஸ் ஒலிம்பியாட் எங்கு நடைபெற்றது? செஸ் ஒலிம்பியாட் வரலாறு என்ன?


 


செஸ் ஒலிம்பியாட் வரலாறு:


1924ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் செஸ் விளையாட்டைச் சேர்க்க பணிகள் நடைபெற்றது. எனினும் அந்த முயற்சி தோல்வி அடைந்தது. தொழில்முறை வீரர்கள் மற்றும் கேளிக்கைக்காக விளையாடும் நபர்களுக்கு இடையே வேறுபாடு அறிய முடியாது என்பதால் செஸ் போட்டி அப்போது ஒலிம்பிக் போட்டிகளில் சேர்க்கப்படவில்லை. 


சர்வதேச செஸ் நாள்:


இதைத் தொடர்ந்து 1924ஆம் ஆண்டு முதல் முறையாக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடத்தப்பட்டது. இந்தப் போட்டி அப்போது அங்கீகரிக்கப்படவில்லை. எனினும் அந்தப் போட்டியின் கடைசி நாளன்று சர்வதேச செஸ் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த கூட்டமைப்பு(FIDE) 1924ஆம் ஆண்டு ஜூலை 20ஆம் தேதி உருவாக்கப்பட்டது. இந்த நாள் தான் சர்வதேச செஸ் நாளாக அறிவிக்கப்பட்டது. 


முதல் செஸ் ஒலிம்பியாட்:


சர்வதேச செஸ் கூட்டமைப்பு (FIDE) 1927ஆம் ஆண்டு அங்கீகரிக்கப்பட்ட முதல் செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்தியது. 1927ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பியாட் போட்டியில் தொழில்முறை வீரர்கள் விளையாட அனுமதிக்கப்படவில்லை. ஆகவே 1927 மற்றும் 1928ஆம் ஆண்டு செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் உலகின் தலை சிறந்த வீரர்கள் இடம்பெறவில்லை. 




அதன்பின்னர் தொடர்ந்து ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை செஸ் ஒலிம்பியாட் நடைபெற்றது. எனினும் இரண்டாம் உலகப் போரின் போது இந்த ஒலிம்பியாட் போட்டிகள் நடத்தப்படவில்லை. 


சோவியத் ரஷ்யா ஆதிக்கம்:


1952ஆம் ஆண்டு நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டியில் முதல் முறையாக சோவியத் ரஷ்யா பங்கேற்றது. அதன்பின்னர் ஒவ்வொரு ஆண்டும் சோவியத் ரஷ்யா அணி 1990ஆம் ஆண்டு வரை  2முறை தவிர ஒலிம்பியாட் போட்டிகளும் வெற்றி பெற்றது. 1976ஆம் ஆண்டு ஹைஃபா ஒலிம்பியாட் போட்டியை சோவியத் ரஷ்யா புறக்கணித்தது. 1978ஆம் ஆண்டு செஸ் ஒலிம்பியாட் போட்டியில் சோவியத் ரஷ்யா இரண்டாம் இடம் பிடித்தது. 


ரஷ்யாவின் ஆதிக்கம்:


1992ஆம் ஆண்டு சோவியத் ரஷ்யா பிரிந்து ரஷ்யாவாக மாறிய பிறகு முதல் முறையாக செஸ் ஒலிம்பியாட் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றது. அப்போது முதல் 2002 ஆம் ஆண்டு வரை ரஷ்ய அணி 6 முறை செஸ் ஒலிம்பியாட் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது. 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண