இந்திய அணி முன்னாள் வீரர்  வினோத் காம்ப்ளி மருத்துவமனையில் நடனமாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது


வினோத் காம்ப்ளி:


முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி , தானே மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வருகிறார், மருத்துவமனையில்  நடனம் ஆடும் வீடியோவில் ஒன்று வெளியாகியுள்ள, இது ஊழியர்களை மட்டுமல்ல, சமூக ஊடகங்களிலும் வைரலானது.


காம்ப்லி (52) சிறுநீர் தொற்று மற்றும் தசைப்பிடிப்பு காரணமாக நோய் வாய்ப்பட்டார், அதைத் தொடர்ந்து அவர் டிசம்பர் 21 அன்று பிவாண்டி நகரத்தின் கல்ஹர் பகுதியில் உள்ள அக்ருதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், தொடர்ச்சியான மருத்துவ பரிசோதனையில் அவரது மூளையில் இரத்தக் கட்டிகள் இருப்பது தெரியவந்தது. அவருக்கு உடனடியாக  மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு, பல கட்ட பரிசோதனைகளுக்கு பிறகு அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 






உடல் நிலையில் முன்னேற்றம்:


இதன் பின்னர் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள் திங்கள்கிழமை தெரிவித்தனர். இந்த நிலையில் அவர் மருத்துவமனையில் நடனமாடும் வீடியோ வெளியாகியுள்ளது. அவர் குணமடைந்து உள்ள வீடியோ நடனமாடும் வீடியோ ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 






காம்ப்லி தனது கடினமான நாட்களில்  தனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் தனது நன்றியைத் தெரிவித்தார். மேலும் அவர் கூறியதாவது “உங்கள் அன்பினால்தான் நான் இவ்வளவு தூரம் வந்திருக்கிறேன். என்றார்