கரூர் மாவட்டத்தில் அதிமுக மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆர். விஜயபாஸ்கர் தலைமையில் கரூர் தலைமை தபால் நிலையம் முன்பு திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தெரிவித்திருந்த நிலையில் காலை 9:30 மணி அளவில் கட்சி நிர்வாகிகள் அதைத் தொடர்ந்து மாவட்ட செயலாளர் உள்ளிட்ட அதிமுக முக்கிய நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்திற்கு வருகை புரிந்தனர். இதற்கு முன்பாகவே நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Continues below advertisement

 

 

Continues below advertisement

அதேபோல் ஆர்ப்பாட்டம் தொடங்கும் முன்பாகவே போலீசார் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி இல்லை என கூறினர். அதைத் தொடர்ந்து மைக்கை பிடித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆர்ப்பாட்டக் கண்டன கோஷங்கள் எழுப்பிய போது அவருக்கும், கரூர் நகர துணை கண்காணிப்பாளர் செல்வராஜ் அவருக்கும் வார்த்தை போர் நடைபெற்றது. அதை தொடர்ந்து ஆர்ப்பாட்டம் கோஷங்கள் எழுப்பாமலே கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 

 

 

 

அதைத்தொடர்ந்து அவர் குண்டு கட்டாக காவலர் வாகனத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு கோஷங்களையும் எழுப்பியவாறு அவர் கைது செய்யப்பட்டார். அதை தொடர்ந்து அவருடன் வந்திருந்த மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர் கழக அதிமுக நிர்வாகிகளும் ஏராளமான பெண்கள் உட்பட அனைவரும் கைது செய்யப்பட்டு காவலர் வாகனம் மூலம் கரூர்- ஈரோடு சாலையில் உள்ள ஆத்தூர் பகுதி அடுத்த திருமண மண்டபத்தில் அவர்களை தங்க வைத்தனர். 

 

அதைத்தொடர்ந்து 500க்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள் அதிமுக மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் உடன் திருமண மண்டபத்தில் ஆலோசனை நடத்தினர். அதைத் தொடர்ந்து மதிய உணவு காவல்துறையின் மூலம் வழங்கப்பட்டது. அப்பொழுது முன்னாள் அமைச்சர் உட்பட அதிமுக நிர்வாகிகள் மதிய உணவு சரி இல்லை எனவும் நாங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள உணவை அருந்த அனுமதி வழங்க வேண்டும் என வாக்குவாதம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து சில மணி நேரத்தில் போலீசார் அனுமதி வழங்கிய நிலையில் அவர்கள் மதிய உணவை உட்கொண்டனர். மேலும் தண்ணீர் பிரச்சனை ஏற்பட்ட நிலையில் அதற்கும் வாக்குவாதத்திற்கு பிறகு அதிமுக நிர்வாகிகளுக்கு அதிமுக சார்பாக கொண்டுவந்த தண்ணீர் பாட்டில் வழங்கப்பட்டது. மேலும் தமிழக உட்பட பல்வேறு மாவட்டங்களில் மாலை 05.00 மணி முதல் கைது செய்யப்பட்ட அதிமுக நிர்வாகிகளை விடுவித்த நிலையில் கரூர் மாவட்டத்தில் தலைமை உத்தரவுக்காக காத்திருந்த போலீசார் சுமார் 06.30 மணி அளவில் அவர்களை விடுதலை செய்ய உத்தரவு வந்த நிலையில் அவர்களை விடுதலை செய்தனர். 

 

அதைத்தொடர்ந்து அப்பொழுது முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது அவர் பேசுகையில், தமிழக அரசு பாலியல் குற்றச்சாட்டு நபர்கள் மீது உறுதி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தொடர்ந்து தமிழகத்தில் இதுபோல் பல்வேறு குற்றச்சம்பங்கள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார். மேலும் மதிய உணவு பற்றிய கேள்விக்கு, அவர் சிறிது நேரம் பேச்சுவார்த்தைக்கு பிறகு அவர்கள் அனுமதி வழங்கினர் என தெரிவித்தார்.