கிருஷ்ணகிரி லண்டன் பேட்டையை சேர்ந்தவர் சத்யா (24). இவரது கணவர் சங்கர் (27). இவர்களது வீடு திருப்பத்தூர் மாவட்டம் பேரணாம்பட்டு அம்பேத்கர் நகரில் உள்ளது. அங்கு கணவன், மனைவி இருவரும் தற்போது வசித்து வருகின்றனர். கிருஷ்ணகிரி கோ ஆபரேட்டிவ் பகுதியை சேர்ந்த சந்திரனின் மகள் சுபலட்சுமி (24). இவர் தற்போது ஓசூர் பொம்மாண்டப்பள்ளியில் உள்ளார். பள்ளி தோழிகளான சத்யாவும், சுபலட்சுமியும் கடந்த சில நாட்களுக்கு முன்பு கிருஷ்ணகிரியில் சந்தித்தனர். அப்போது, இவர் தமக்கு உயர் அதிகாரிகளுடன் நன்கு பழக்கம் உள்ளது எனக்காக அதிகாரிகள் என்ன வேண்டும் என்றாலும் செய்வார்கள் சில மாதங்களுக்கு முன்பு நான் ஒருவருக்கு வேலை வாங்கி கொடுத்தேன் என்றுள்ளார். எனவே உனக்கு அரசு வேலை எதுவும் வேண்டும் என்றால் நீ  பணத்தை கொடுத்தால் நான் உனக்கு சுலபமாகவும்  உடனடியாக வேலை வாங்கி தருவதாக சுபலட்சுமி, சத்யாவிடம் தெரிவித்துள்ளார். 



இதனை நம்பிய சத்யா, BBA பட்டதாரியான தனது கணவர் சங்கருக்கு அரசு வேலை வேண்டும் என்று கேட்டுள்ளார். அப்போது சுபலட்சுமி ஓசூர் வருமான வரி அலுவலகத்தில் வரி மேலாளர் பணி உள்ளது. இதற்கு நீங்கள் 1.62 லட்சமும் சம்பளமும் இதர படிகளும் கிடைக்கும். என சுபலட்சுமி கூறியுள்ளார். இதனை நம்பிய சத்யா கொஞ்சம் கொஞ்சமாக 4.65 லட்சம் கொடுத்துள்ளார். இதே போல் சேலம் கோனேரிப்பட்டியை சேர்ந்த மாதையன் என்பவரும் அரசு வேலை வேண்டும் என்று கேட்டு சுபலட்சுமியிடம் 1 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார்.


இந்த நிலையில் சத்யாவையும், மாதையனையும் அரசு வேலைக்கான ஆணையை கொடுப்பதற்காக கடந்த ஜூன் 21ஆம் தேதி கிருஷ்ணகிரிக்கு சுபலட்சுமி வரசொல்லியுள்ளார். அப்போது, 2 நபர்களும் வந்தனர் அதனைத்தொடரந்து  பணி நியமன ஆணையை அவர் கொடுத்து ஜூன் 23 ஆம் தேதி பணியில் சேர்ந்து கொள்ளும்படி தெரிவித்துள்ளார். இதனையடுத்து பணி நியமன ஆணையுடன் 23 ஆம் தேதி மாதையனும், சங்கர் ஆகிய இருவரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்றனர். அப்போது அவர்கள் அந்த பணிநியமனம்  ஆணையை கொடுத்த போது அது போலி என தெரியவந்தது.


 




இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த இரண்டு நபர்களும் கிருஷ்ணகிரி மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினரிடம் புகார் அளித்தனர். அதன் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில்  சுபலட்சுமியை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர். அதனைதொடர்ந்து நீதி மன்றத்தில் அஜர்படுத்தப்பட்டு கிருஷ்ணகிரி கிளை சிறையில் அடைத்தனர்.