இங்கிலாந்து-இந்தியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. மூன்றாவது நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 391 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனைத் தொடர்ந்து மூன்றாவது நாளான இன்று இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. தொடக்க முதலே ராகுல் சற்று தடுமாறினார். 5 ரன்களுடம் அவர் அவுட் ஆகினார். அதன்பின்னர் ரோகித் சர்மா 21 ரன்களுடன் ஆட்டமிழந்தார். 


அடுத்து களமிறங்கிய கேப்டன் கோலியும் தொடக்கத்தில் நிதானமாக ஆடினார். 20 ரன்கள் எடுத்திருந்த போது சாம் கரன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். முதல் இன்னிங்ஸிலும் விராட் கோலி 42 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். கடந்த டெஸ்ட் போட்டியில் ரன் எதுவும் எடுக்காமல் முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். அதேபோல் இந்தப் போட்டியிலும் தொடக்கம் கிடைத்தும் அதை சரியாக பயன்படுத்தாமல் மீண்டும் ஏமாற்றியுள்ளார். 


 






கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக லார்ட்ஸ் பால்கனியில் கேப்டன் விராட் கோலி நாகினி டென்ஸ் ஆடியது வைரலானது. அந்தப் பதிவிற்கு சிலர் அவர் பால்கனியில் ஆடியதை போல் களத்தில் ஆட வேண்டும் என்று பதிவிட்டிருந்தனர். ஆனால் அவர் மீண்டும் களத்தில் சொதப்பியுள்ளார். 




இந்திய கேப்டன் விராட் கோலியை பொறுத்தவரை கடந்த 10 இன்னிங்ஸில் அவர் 3 அரைசதம் அடித்துள்ளார். அதுதவிர கடைசியாக 2019ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட் பங்களாதேஷ் அணிக்கு எதிராக ஒரு சதம் அடித்தார். அதன்பின்னர் இதுவரை டெஸ்ட் கிரிக்கெட் சதம் அடிக்கவே இல்லை. அந்த சதம் இல்லாத இன்னிங்ஸ் இன்னும் தொடர்ந்து கொண்டே போகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


 






தற்போது வரை இந்திய கிரிக்கெட் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 64 ரன்கள் எடுத்துள்ளது. இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி 37 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. 


மேலும் படிக்க: தோனியின் இந்த சாதனைகளை முறியடிப்பது மற்ற வீரர்களுக்கு எப்பவுமே சவால்தான்..!