துருக்கி தலைநகர் இஸ்தான்புலில் ஆசிய பவர்லிஃப்டிங் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டிகளில் 140 கிலோ எடைப்பிரிவு பவர்லிஃப்டிங்கில் இந்தியா சார்பில் திமுக எம்.எல்.ஏ ராஜா பங்கேற்றார். இதில் சிறப்பாக செயல்பட்ட இவர் வெண்கலப்பதக்கத்தை வென்று அசத்தினார்.
தமிழ்நாட்டின் சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள திமுகவைச் சேர்ந்த ராஜா நீண்ட நாட்களாக பவர்லிஃப்டிங் போட்டிகளில் பங்கேற்று வருகிறார். உள்ளூர் மற்றும் தேசிய போட்டிகளில் பெற்ற வெற்றிகளின் காரணமாக இவர் ஆசிய பவர்லிஃப்டிங் போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பை பெற்றார்.
இந்தப் போட்டியில் சிறப்பாக செயல்பட்டு தற்போது வெண்கலப்பதக்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார். அத்துடன் இவர் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள காமன்வெல்த் பவர்லிஃப்டிங் போட்டிகளிலும் பங்கேற்க உள்ளார். வெண்கலப்பதக்கம் வென்ற திமுக எம்.எல்.ஏவிற்கு பலரும் தங்களுடைய வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றன.
மேலும் படிக்க: கிறிஸ்ட்சர்ச் டூ செஞ்சுரியன்- தொடரும் இந்தியாவின் மோசமான பேட்டிங் வரலாறு !