காரைக்குடியைச் சேர்ந்த செஸ் பயிற்றுநர் காவியா, மாணவ-மாணவியருக்கு சதுரங்க விளையாட்டு தொடர்பான பல்வேறு தகவல்களை எடுத்துரைத்தார்.

Continues below advertisement

சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் சர்வதேச செஸ் தினம்

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் உள்ள சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் சர்வதேச செஸ் தினம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. விழாவிற்கு பள்ளி தலைமையாசிரியர் சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். தேவகோட்டை வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர் ஜோனி சுபால்டன் முன்னிலை வகித்தார். மாணவி நந்தனா வரவேற்புரை வழங்கினார். காரைக்குடியைச் சேர்ந்த செஸ் பயிற்றுநர் காவியா, மாணவ-மாணவியருக்கு சதுரங்க விளையாட்டு தொடர்பான பல்வேறு தகவல்களை எடுத்துரைத்தார். மேலும், மேக்னெட் சதுரங்க பலகையை பயன்படுத்தி சதுரங்க விளையாட்டின் முக்கியத்துவம், ஒவ்வொரு காயின் மதிப்பெண்கள், காய்களின் நகர்வுகள் (Movement) உள்ளிட்ட அம்சங்களை விரிவாக விளக்கினார். இதனைத் தொடர்ந்து, பள்ளி அளவில் நடைபெற்ற செஸ் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவியருக்கு பரிசுகள் வழங்கி பாராட்டப்பட்டனர். விழாவின் நிறைவில் ஆசிரியை முத்துலட்சுமி நன்றியுரை வழங்கினார்.

Continues below advertisement