வேகப்பந்து வீச்சாளர் அஸ்வினை ’சார்பட்டா’ கபிலன் எனக் கலாய்த்துள்ளது டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி. டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி இதனைத் தனது ஃபேஸ்புக்கில் பதிவேற்றியுள்ள நிலையில் தற்போது அந்தக் குசும்பு போஸ்ட் வைரலாகி வருகிறது. 


இந்திய அணியின் பவுலிங் கோச்சுடன் அஸ்வின் பேசும் புகைப்படத்தைப் பதிவிட்டு ’இது என் ஆட்டம் வாத்தியாரேனு கபிலன் ரங்கன் வாத்தியார்கிட்ட சொல்றாப்டி!’ எனப் பதிவிட்டுள்ளது டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் சமூகவலைதளப் பக்கம். 


 



முன்னதாக, இங்கிலாந்துடன் 5 டெஸ்ட் போட்டிகளில் கொண்ட தொடரில் விளையாட உள்ள இந்திய கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டது.


உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் பங்கேற்ற பிறகு, இங்கிலாந்து அணியுடனான டெஸ்ட் போட்டித் தொடரில் பங்கேற்பதற்காக அந்த நாட்டிலேயே கடந்த ஜூன் மாதம் முதல் இந்திய அணி தங்கியுள்ளனர்.  வரும் ஆகஸ்ட் 4-ந் தேதி தொடங்க உள்ள இந்த தொடருக்கான இந்திய அணி ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட நிலையில், சில வீரர்களுக்கு காயம் ஏற்பட்டதால், அவர்கள் தொடரில் இருந்து விலக்கப்பட்டு, அவர்களுக்கு பதிலாக மாற்று வீரர்கள் சேர்க்கப்பட்டு தற்போது புதிய அணியை பி.சி.சி.ஐ., அறிவித்துள்ளது. ப்ரித்வி ஷா, சூர்யா குமார் யாதவ் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டனர்.


இந்திய வீரர்கள் விவரம்:

ரோஹித் சர்மா, மயங்க் அகர்வால், புஜாரா, விராட் கோலி (கேப்டன்), அஜின்கிய ரஹானே (துணை கேப்டன்), ஹனுமா விஹாரி, ரிஷாப் பன்ட் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஸ்வின், ரவிந்திர ஜடேஜா, அக்ஸர் பட்டேல், ஜஸ்பிரித் பும்ரா, இஷாந்த சர்மா, முகமத் ஷமி, சிராஜ், ஷர்துல் தாக்கூர், உமேஷ் யாதவ், கே.எல்.ராகுல், சாஹா (விக்கெட் கீப்பர்), அபிமன்பு ஈஸ்வரன்,  ப்ரித்வி ஷா, சூர்யா குமார் யாதவ்.
நெட் பவுலர்ஸ்: பிரஷித் கிருஷ்ணா, நாக்வாஸ்வாலா 


இங்கிலாந்து அணி:


இந்தத் தொடருக்கான இங்கிலாந்து அணி கடந்த 22ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. கேப்டன் ஜோரூட் தலைமையிலான இங்கிலாந்து அணியில் ஜேம்ஸ் ஆண்டர்சன், ஜானி பார்ஸ்டோ, டாம் பெஸ், ஸ்டூவர்ட் பிராட், ரோரி பர்னஸ், ஜோஸ் பட்லர், ஜாக் கிராலோ, சாம் கரண், ஹசீப் ஹமீது, டான் லாரன்ஸ், ஜேக்லீச், ஒலே போப், ஒல்லி ராபின்சன், டாம் சிப்ளி, பென் ஸ்டோக்ஸ். மார்க் உட் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.


ஆகஸ்ட் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை நடைபெற உள்ள இந்தத்தொடர் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணி நியூசிலாந்து அணியிடம் கோப்பையை பறிகொடுத்தது என்பதால், இந்த தொடரில் வெற்றி பெற்று இந்திய அணி கோப்பையுடன் நாடு திரும்பும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்