ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் 50 அரைசதங்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை டேவிட் வார்னர் படைத்துள்ளார். 14-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 23 லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - சன் ரைசர்ஸ் ஹைதாராபாத் அணிகள் நேற்று மோதின. இதில், சென்னை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்தப் போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் 57 ரன்கள் அடித்தார். அவர் அரைசதம் அடித்ததன் மூலம் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் 50 முறை அரைசதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார். இவருக்கு அடுத்த இடத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் ஷிகர் தவான் 43 அரை சதங்கள் அடித்து இரண்டாவது இடத்திலும், ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டன் விராட் கோலி 40 அரை சதங்கள் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.

And now that's 2⃣0⃣0⃣ IPL sixes for our captain 🙌🧡#CSKvSRH #OrangeOrNothing #OrangeArmy #IPL2021 pic.twitter.com/g7fXY4GwOe
— SunRisers Hyderabad (@SunRisers) April 28, 2021

மேலும், நேற்றைய போட்டியில் பல சாதனைகளை டேவிட் வார்னர் படைத்துள்ளார். நேற்று இரண்டு  சிக்ஸர்கள் அடித்தார். இதன்மூலம், ஐபிஎல் போட்டியில் 200 சிக்ஸர்களை அவர் விளாசியுள்ளார். மேலும், T20 கிரிக்கெட் போட்டியில் 10,000 ரன்களை கடந்த 4-வது வீரர் என்ற சாதனையையும் படைத்தார். இவருக்கு முன்பாக, வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெய்ல், பாகிஸ்தான் வீரர் சோயிப் மாலிக் ஆகியோர் 10 ஆயிரம் ரன்களை கடந்துள்ளனர்.