இயக்குநர் வெற்றிமாறனின் அடுத்த படைப்பான 'விடுதலை'  திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.  நடிகர் விஜய் சேதுபதி மற்றும் நடிகர் சூரி இதில் முக்கிய கதாப்பாத்திரம் ஏற்று நடிக்கின்றனர்.  



 


தேசிய விருது பெற்ற இயக்குநர் வெற்றிமாறன் முற்றிலும் மாறுபட்ட களங்களில், தன் தனித்த முத்திரை கொண்ட படங்களினால் இந்திய அளவில் ரசிகர்களை கவர்ந்து புகழ்பெற்றவர்.  விடுதலை திரைப்படத்தில் நடிகர் சூரி கதை நாயகனாகவும், விஜய் சேதுபதி வாத்தியாராகவும் நடிக்கவுள்ளனர். இயக்குநர் வெற்றிமாறன் முதன்முறையாக இப்படத்தில் இசைஞானி இளையராஜாவுடன் இணைந்து பணியாற்றுகிறார். 




ஆரம்பத்தில் படத்தை தமிழில் மட்டுமே வெளியிட முடிவு செய்தனர் . பின்பு விஜய் சேதுபதிக்கு படத்தில் முக்கியமான கதாபாத்திரம் இருப்பதாலும், தற்பொழுது விஜய் சேதுபதி தெலுங்கு , ஹிந்தி மற்றும் மலையாளத்தில் அதிகம் படங்களில் நடித்து வருவதாலும், படத்தை தெலுங்கு , ஹிந்தி , மலையாளம் ,கன்னடம் போன்ற மொழிகளில் டப்பிங் செய்து வெளியிடப் போவதாக படக்குழு முடிவு செய்துள்ளது .