காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் கடந்த 28ஆம் தேதி முதல் தொடங்கி வரும் ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் 72 நாடுகளை சேர்ந்த சுமார் 5000 வீரர் வீராங்கனைகள் இந்தப் போட்டியில் பங்கேற்றுள்ளனர். இந்தியா சார்பில் சுமார் 200க்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். 


 


இந்நிலையில் இன்று நடைபெற்ற கலப்பு இரட்டையர் பிரிவு பேட்மிண்டன் போட்டியில் இந்திய அணி இலங்கை அணியை எதிர்த்து விளையாடியது. இதில் முதலில் கலப்பு இரட்டையர் பிரிவு போட்டி நடைபெற்றது. அதில் சத்விக் சாய்ராஜ் ரன்கிரெட்டி-மச்சமடா போனப்பா இலங்கையின் சச்சின் தயாஸ் மற்றும் திலின் ஹெண்டாவாவை எதிர்த்து விளையாடினர். இந்தப் போட்டியில் முதல் கேமை இந்திய அணி 21-14 என்ற கணக்கில் வென்றது. அதன்பின்னர் இரண்டாவது கேமை 21-9 என்ற கணக்கில் இந்திய அணி வென்று முதல் போட்டியில் வெற்றி பெற்றது. 


 


இதைத் தொடர்ந்து ஆடவர் ஒற்றையர் பிரிவு போட்டி நடைபெற்றது. இதில் இந்தியாவின் லக்‌ஷ்யா சென் இலங்கையின் நிலுகா கருணரத்னேவை எதிர்த்து விளையாடினார். அந்தப் போட்டியை  என்ற கணக்கில் வென்றார். 


 


அதன்பின்னர் மகளிர் ஒற்றையர் போட்டியில் அகர்ஷி கஷ்யப்  இலங்கையின் விடாரா சுஹாசினியை எதிர்த்து விளையாடினர். இந்தப் போட்டியை அகர்ஷி கஷ்யப் 21-3, 21-9 என்ற கணக்கில் வென்று அசத்தினார். இதன்காரணமாக இந்திய அணி 3-0 என முன்னிலை பெற்றது. 


 


இதன்பின்னர் ஆடவர் இரட்டையர் போட்டியில் சுமித் ரெட்டி மற்றும் சிராக் செட்டி இணை சச்சின் டியாஸ்-அபேவிக்ரமா ஜோடியை எதிர்த்து விளையாடியது. இந்தப் போட்டியில் சுமித் ரெட்டி மற்றும் சிராக் செட்டி இணை சிறப்பாக விளையாடி 21-10, 21-13 என்ற கணக்கில் வென்றது. 


 


கடைசியாக மகளிர் இரட்டையர் போட்டி நடைபெற்றது. அதில் த்ரீஷா ஜாலி மற்றும் காயத்ரி கோபிசந்த் இணை திலினி-சுஹாசினி ஜோடியை எதிர்த்து விளையாடினர். அந்தப் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய ஜோடி 21-18 , 21- 6 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இன்று இரவு நடைபெறும் அடுத்த குரூப் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை எதிர்த்து விளையாட உள்ளது. 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண