CM Stalin : சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் சென்னை - ஹைதரபாத் அணிகளுக்கு இடையேயான போட்டியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது குடும்பத்துடன் கண்டு ரசித்து வருகிறார்.


குடும்பத்துடன் கிரிக்கெட் பார்த்த முதலமைச்சர்:


ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் போட்டியில் சென்னை மற்றும் ஐதராபாத் அணிகள் இடையேயான போட்டி நடைபெற்று வருகிறது. இந்திய நேரப்படி மாலை 7.30 மணிக்கு இந்த போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன், மார்க்ரம் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடன் மோதுகின்றது.  


இந்நிலையில், சென்னை மற்றும் ஐதராபத் அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது குடும்பத்தினருடன் கண்டு ரசித்து வருகிறார். முதலமைச்சர் ஸ்டாலினுடன் அவரது மனைவி துர்கா ஸ்டாலினும், மகனும் விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினும் போட்டியை கண்டு ரசித்து வருகின்றனர்.






மஞ்சள் ஜெர்சியில் மு.க.ஸ்டாலின்:


சென்னை அணியின் மஞ்சள் நிற ஜெர்ஸியை அணிந்து முதல்வர் ஸ்டாலின் கிரிக்கெட் மேட்சை கண்டு ரசித்து வருகிறார். இவர் மட்டுமின்றி, அவரது மனைவி துர்கா ஸ்டாலின் மஞ்சள் நிற புடவையிலும், மகனும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் சென்னை அணியின் மஞ்சள் நிற ஜெர்ஸியை அணிந்து போட்டியை பார்த்து வருகின்றனர். இவர்களுடன் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி உடன் இருக்கிறார்.


மறுபக்கத்தில், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் சென்னை - ஹைதரபாத் அணிகளுக்கு இடையேயான போட்டியை கண்டு ரசித்து வருகிறார்.