நடிகர் விஜய் நடித்த பெரும்பாலான திரைப்படங்களில் அவரின் நண்பர்களின் வட்டத்தில் ஒருவராக துணை கதாபாத்திரங்களில் நடித்ததன் மூலம் திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் சஞ்சீவ். சினிமாவில் மட்டுமல்ல நிஜத்திலும் நடிகர் விஜய்யின் நெருங்கிய நண்பர்களில் ஒருவர் சஞ்சீவ்.


சின்னத்திரையிலும் தடம் படித்த சஞ்சீவ்:


சினிமாவில் மட்டுமல்லால் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியிலும் சஞ்சீவ் மிகவும் பிரபலம். 2002ம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பான மெட்டி ஒலி சீரியல் மூலம் நெகடிவ் ரோலில் அறிமுகமானவர். பின்னர் 2007ம் ஆண்டு ஒளிபரப்பான 'திருமதி செல்வம்' சீரியலின் கதாநாயகனாக நடித்தார். அதில் அவரின் சிறப்பான நடிப்பு பாராட்டுகளை பெற்று தந்தது. சன் டிவி, விஜய் டிவி, ராஜ் டிவி என பல தொலைக்காட்சிகளில் 25 க்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்துள்ளார். 'மானாட மயிலாட' என்ற டான்ஸ் ஷோவை தொகுத்து வழங்கியதன் மூலமும் பிரபலமானார்.


 



ராதிகாவின் அடுத்த தயாரிப்பு :


அந்த வகையில் நடிகை ராதிகா தனது ராடான் மீடியா மூலம் 'கிழக்கு வாசல்' என்ற புதிய சீரியலை தயாரித்து நடித்து வருகிறார். இந்த சீரியல் விரைவில் விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது. இந்த சீரியலின் பூஜையின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமீபத்தில் தனது சோசியல் மீடியா பக்கம் மூலம் பகிர்ந்து இருந்தார் நடிகை ராதிகா சரத்குமார். இந்த சீரியலில் நடிகர் விஜய் தந்தை இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகர் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் இதில் ரேஷ்மா முரளிதரன், சஞ்சீவ் மற்றும் பலர் நடிக்கிறார்கள். ஒரு வாரமாக இந்த சீரியலின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.


பரவி வரும் பலதரப்பட்ட கருத்துக்கள்:


மிகவும் மும்மரமாக நடைபெற்று வரும் 'கிழக்கு வாசல்' சீரியலில் இருந்து நடிகர் சஞ்சீவ் விலகி விட்டதாக தகவல்கள் பரவி வருகின்றன. அவர் படப்பிடிப்பில் கலந்து கொள்ளாததால் பல தரப்பட்ட கருத்துக்கள் இணையத்தில் பரவி வருகிறது. நடிகர் விஜய் அவருடைய தந்தை எஸ்.ஏ.சி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருப்பதாக பேசப்படும் வேளையில் அவருடன் இணைந்து இந்த சீரியலில் நடிப்பது விஜய் நண்பராக சஞ்சீவுக்கு சரியாக படவில்லை என்றும், அதனால் அவர் விலகி விட்டார் என ஒரு சாரார் கருத்து தெரிவித்து வருகையில் வேறு சிலரோ சீரியலின் கதாநாயகி ரோஷாமாவிற்கும் சஞ்சீவிற்கும் பொருத்தம் இல்லாத காரணத்தால் அவர் விலகியதாகவும் கூறுகிறார்கள்.


உண்மை விரைவில் தெரியும் :


ஒரு சிலர் கதைப்படி சஞ்சீவ் நடிக்கும் காட்சிகள் தற்போது நடைபெறாததால் அவர் கலந்து கொள்ளவில்லை என கூறுகிறார்கள். இருப்பினும் சஞ்சீவ் தரப்பில் இருந்து அவர் 'கிழக்கு வாசல்' சீரியலில் இருந்து விலகியதாக எந்த ஒரு தகவலும் இது வரையில் வெளியிடவில்லை. சீரியல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் போது தான்  உண்மையிலேயே சஞ்சீவ் விலகி விட்டாரா என்பதும் அவருக்கு பதிலாக யார் ஹீரோவாக நடிக்கிறார் என்பதும் தெரிய வரும்.