ஐபிஎல் 2021 தொடர் அண்மையில் வீரர்கள் மற்றும் அணியை சேர்ந்த நிர்வாகிகளுக்கு கொரோனா தோற்று ஏற்பட்டதன் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது. இந்த ஊரடங்கு காலத்தில் ரசிகர்களுக்கு மிகப்பெரிய பொழுதுபோக்காக இருந்தது ஐபிஎல் தொடரே, ஆனால் மே 4ஆம் தேதி மாலை முதல் ஐபிஎல் இல்லாததால் ரசிகர்கள் அதனை பெரிதும் மிஸ் செய்கின்றனர். இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர்களான தோனி, ரெய்னா, பிராவோ ஆகியோரின் "டீ" டே  புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில். ரசிகர்கள் பலரின் ஐ.பி.எல் நினைவுகளை தூண்டும் விதமாக அமைந்துள்ளது இந்த புகைப்படம்...


ஐபிஎல் 2021 தொடர் நடைபெற்று கொண்டிருக்கும் போது எடுக்கப்பட்டுள்ள இந்த புகைப்படத்தில் தோனி கையில் தேநீர்  கோப்பையுடன் அமர்ந்திருக்க, ரெய்னாவும், பிராவோவும் பேசி சிரித்து கொண்டிருக்கிறார்கள். நேற்றைய தினம் சர்வதேச  தேநீர் தினம் கொண்டாடப்பட்ட நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் இந்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளது..


 






கடந்த ஆண்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சரியாக விளையாடாத நிலையில், இந்தாண்டு மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தது. இந்த சீசன் சென்னை அணி விளையாடிய 7 போட்டிகளில் 5ல் வெற்றி பெற்று, புள்ளி பட்டியலில் 2வது இடத்திலும் இருந்ததது. அதனால் 4வது முறையாக கோப்பையை சென்னை அணி வெல்லும் என்ற கனவோடு காத்திருந்த சென்னை அணி ரசிகர்களுக்கு கொரோனா பாதிப்பால் கைவிடப்பட்ட ஐபிஎல் தொடர் மிக பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்திவிட்டது. இந்த நிலையில் கிரிக்கெட் ரசிகர்களுக்கு தற்போது இருக்கும் மிக பெரிய எதிர்ப்பார்ப்பு, இந்தாண்டு ஐபிஎல் தொடர் மீண்டும் தொடங்குமா என்பதே. அந்த எதிர்பார்ப்பை மேற்கொண்டு தூண்டும் விதமாக அமைந்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பதிவு... 


இந்நிலையில் கைவிடப்பட்ட ஐபிஎல் தொடரை நடத்தி முடிக்க பிசிசிஐ நிர்வாகம் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது, அந்த வகையில் இங்கிலாந்து அல்லது ஐக்கிய அரபு அமீரகத்தில் மீதமுள்ள ஐபிஎல் 2021 தொடரின் 31 போட்டிகள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. இது குறித்து முடிவெடுக்க மே 29ம் தேதி கூடுகிறது இந்திய கிரிக்கெட் வாரியத்தின் சிறப்பு பொது குழு கூட்டம்.