Cristiano Ronaldo: அன்பு மகளின் பெயரை அறிவித்த ரொனால்டொ- ஜார்ஜினா தம்பதி

கிறிஸ்டினோ ரொனால்டொ- ஜார்ஜினா தம்பதியினர் தங்கள் மகளுக்கு பெல்லா எஸ்மரால்டா என்று பெயரிட்டுள்ளனர்.

Continues below advertisement

பிரபல கால்பந்து வீரரான கிறிஸ்டினோ ரொனால்டோ – ஜார்ஜினா தம்பதியினர் அண்மையில் தங்களுக்கு பிறந்த மகளுக்கு 'பெல்லா எஸ்மரால்டா' (Bella Esmeralda) என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள்.

Continues below advertisement

கால்பந்து உலகில் ஜாம்பவான், மான்செஸ்டர் யுனைடெட் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, அவர் மனைவி ஜார்ஜினா இருவருக்கும் 6 குழந்தைகள் உள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம் 18-ஆம் தேதி அன்று அவரது மனைவி ஜார்ஜினாவுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. ஒரு ஆண், ஒரு பெண் என பிறந்த இரட்டை குழந்தைகளில், ஆண் குழந்தை பிறக்கும்போதே இறந்துவிட்டது. அது தொடர்பான செய்தியையும் ரொனால்டோ பகிர்ந்திருந்தார். உலகம் முழுவதும் இருக்கும் ரொனால்டோ ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் கூறினர்.

பிறந்த இரட்டை குழந்தைகளில் மகளுக்கு 'பெல்லா எஸ்மரால்டா' எனப் பெயரிட்டுள்ளனர் ரொனால்டோ தம்பதியர்.

 இதுதொடர்பாக அவரது மனைவி ஜார்ஜினா இன்ஸ்டாகிராம் பதிவில் தனது மகளின் படத்தை பகிர்ந்து 'பெல்லா எஸ்மரால்டா' என்ற பெயரை பிறந்த தினத்துடன்  குறிப்பிட்டு போஸ்ட் செய்துள்ளார்.

முன்னதாக அண்மையில் தனது மகளின் படத்தை முதல்முறையாக பகிர்ந்திருந்தார் ரொனால்டோ. அவர் குடும்பத்தினருடன் இருக்கும் புகைப்படத்துடன்,  

 

 

"ஜார்ஜினாவும், மகளும் வீடு திரும்பியுள்ளனர். உங்கள் அன்பான வார்த்தைகளுக்கும், அரவணைப்புக்கும் நன்றி. உங்கள் ஆதரவு இந்நேரத்தில் எங்களுக்கு மிகவும் முக்கியமானதாகும். புதிய உயிர் ஒன்றை எங்கள் உலகிற்கு பேரன்புடன் வரவேற்கும் நேரமிது என்று  ரொனால்டோ நெகிழ்ச்சியுடன் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருந்தார்.

அதோடு, தனது மகளுடன் இருக்கும் போட்டோவை பகிர்ந்து ‘Forever’ என்று குறிப்பிட்டிருந்தார்.

Continues below advertisement
Sponsored Links by Taboola