உலககோப்பை டி20 போட்டித் தொடர் ஆஸ்திரேலியாவில் அடுத்த மாதம் தொடங்க உள்ளது. இந்த நிலையில், உலககோப்பை டி20 தொடரில் பங்கேற்பதற்காக ஒவ்வொரு நாட்டு அணிகளும் தங்களது நாட்டு அணிகளை அறிவித்து வருகின்றனர். இந்த நிலையில், ஜிம்பாப்வே கிரிக்கெட் நிர்வாகம் உலககோப்பைக்கான கிரிக்கெட் அணியை அறிவித்துள்ளது.






உலககோப்பைக்கான ஜிம்பாப்வே அணிக்கு கேப்டனாக எர்வின் கிரெக் நியமிக்கப்பட்டுள்ளார். மற்ற வீரர்கள் விவரம் பின்வருமாறு :


எர்வின் கிரெக் ( கேப்டன்), பர்ல் ரயான், சகப்வா ரெஜிஸ், சடாரா டென்டாய், எவன்ஸ் பிராட்லி, ஜாங்வி லூக், மடான்டே க்ளிவி, மதவாரே வெஸ்லி, மசகட்சா வெலிங்டன், முனியோங்கா டோனி, முசர்பானி ப்ளெசிங், நிகர்வா ரிச்சர்ட், ராசா சிக்கந்தர், ஷிம்பா மில்டன், வில்லியம்ஸ் சீன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். ரிசர்வ்ட் வீரர்களாக சிவங்கா டனகா, கையா இன்னொசன்ட், கசுசா கெவின், மாருமனி தாடிவனசே, விக்டர்.




ஜிம்பாப்வே அணியின் கேப்டன் கிரேக் எர்வின் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் தொடையில் ஏற்பட்ட தசைப்பிடிப்பால் அணியில் இருந்து விலகியிருந்தார். தற்போது, அவர் முழு உடல்தகுதி பெற்றுவிட்டதால் மீண்டும் ஜிம்பாப்வே அணிக்கு கேப்டனாக திரும்பியுள்ளார்.






ஜிம்பாப்வே அணி தகுதிச்சுற்றில் ஆடி தகுதிப்பெற்றால் மட்டுமே உலககோப்பைத் தொடரின் சூப்பர் 12 பிரிவுக்கு தகுதி பெற முடியும். இந்த சுற்றில் குரூப் பி பிரிவில் இடம்பெற்றுள்ள ஜிம்பாப்வே அணி வரும் அக்டோபர் 17-ந் தேதி அயர்லாந்து அணியுடன் தனது முதல் ஆட்டத்தில் ஆடுகிறது. அக்டோபர் 19-ந் தேதி வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் தனது இரண்டாவது ஆட்டத்தில் ஆடுகிறது. அக்டோபர் 21-ந் தேதி ஸ்காட்லாந்து அணியுடன் மூன்றாவது ஆட்டத்தில் ஆடுகிறது.


இந்த சுற்றில் தகுதிப் பெற்றால் சூப்பர் 12 சுற்றில் நேரடியாக தகுதி பெற்றுள்ள அணிகளுடன் உலககோப்பைத் தொடரில் ஜிம்பாப்வே அணி பங்கேற்கும். ஆசிய கோப்பையை வென்ற இலங்கை அணியும் தகுதிச்சுற்றில் ஏ பிரிவில் ஐக்கிய அரபு அமீரகம், நெதர்லாந்து, நமீபியா அணிகளுடன் மோதுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


ஜிம்பாப்வே அணி பயிற்சிப்போட்டியில் இலங்கை, நமீபியா அணிகளுடன் மோதுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க : ENG vs PAK T20 2022: பாகிஸ்தான் வந்த இங்கிலாந்து அணி... 17 ஆண்டுக்கு பிறகு மண்ணில் கெத்தாக கால் வைத்த வீரர்கள்..!


மேலும் படிக்க : Sourav Ganguly : உலகக்கோப்பைக்கு பிறகு கங்குலி டார்கெட் செய்வது இதுதானா? கிரிக்கெட் அரங்கில் நடப்பது என்ன?