முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளரும், புகழ்பெற்ற ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங்கின் தந்தையுமான யோகராஜ் சிங் தான் இறக்க தயாராக இருப்பதாக கூறி பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளார். 

Continues below advertisement

யோகராஜ் சிங்:

இந்திய முன்னாள் வீரரான  யுவராஜ் சிங்கின் தந்தையான யோகராஜ் சிங் சர்ச்சை கருத்துகளுக்கு பெயர் போனவர். இந்த நிலையில் தான் தனிமையில் இருப்பதாகவும் தான் இப்போதே இறக்க தயாராக இருப்பதாகவும் பேசியுள்ளார். 

இது குறித்து தனியார் யூடியுப் சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில் : "யுவியும் அவரது தாயாரும் என்னை விட்டுச் சென்றபோது, ​​அது எனக்கு மிகப்பெரிய அதிர்ச்சியைக் கொடுத்தது. என் வாழ்நாள் முழுவதும், என் இளமைப் பருவம் முழுவதும் நான் அர்ப்பணித்த அந்தப் பெண்ணும் என்னை விட்டுப் பிரிந்து செல்ல முடியுமா? இப்படி நிறைய விஷயங்கள் அழிக்கப்பட்டன. நான் எல்லோராலும் எல்லாவற்றையும் சரியாகச் செய்தபோது இதெல்லாம் ஏன் நடக்கிறது என்று கடவுளிடம் கேட்டேன். நான் சில தவறுகளைச் செய்திருக்கலாம், ஆனால் நான் ஒரு அப்பாவி மனிதன்; நான் யாருக்கும் எந்தத் தீங்கும் செய்யவில்லை. நான் கடவுளுக்கு முன்பாக அழுதேன், அவர் என்னை அந்தக் கடலில் இருந்து வெளியே அழைத்துச் சென்றார்."

Continues below advertisement

மகிழ்ச்சி தராத இரண்டாவது திருமணம்:

தனது இரண்டாவது திருமணமும் மகிழ்ச்சியை தரவில்லை என்று பேசிய அவர் "இது கடவுளின் விளையாட்டு, எனக்காக எழுதப்பட்டது. நிறைய கோபமும் பழிவாங்கும் உணர்வும் இருந்தது. பின்னர் கிரிக்கெட் என் வாழ்க்கையில் வந்தது, நிறுத்தப்பட்டது, யுவியை கிரிக்கெட் விளையாட வைத்தது, அவர் விளையாடிவிட்டு வெளியேறினார். பின்னர், நான் மீண்டும் திருமணம் செய்து கொண்டேன், இரண்டு குழந்தைகளைப் பெற்றெடுத்தேன், அவர்களும் அமெரிக்காவிற்குச் சென்றனர். சில படங்களும் வெளியிடப்பட்டன, காலம் கடந்துவிட்டன, எல்லாம் தொடங்கிய இடத்திற்குத் திரும்பின. நான் என்னையே கேட்டுக்கொண்டேன், "இதையெல்லாம் நான் எதற்காகச் செய்தேன்? இப்போது உன்னுடன் யாராவது இருக்கிறார்களா? இது எனக்கு நடந்திருக்க வேண்டும், நல்லதுக்கு நடந்தது," என்றார்.

”தனிமையில் இருக்கிறேன்”

தனது தற்போதைய குடும்பத்தினருடனான உறவை குறித்து கேட்ட போது, "நான் மாலையில் தனியாக அமர்ந்திருக்கிறேன், வீட்டில் யாரும் இல்லை. உணவுக்காக அந்நியர்களையே சார்ந்திருக்கிறேன், சில சமயங்களில் ஒருவர், சில சமயங்களில் மற்றவர். ஆனால் நான் யாரையும் தொந்தரவு செய்வதில்லை. எனக்குப் பசித்தால் யாராவது அல்லது மற்றவர்கள் எனக்கு உணவு வாங்கித் தருவார்கள். நான் வீட்டு வேலைக்காரர்களையும் சமையல்காரர்களையும் வைத்துக்கொண்டு, பரிமாறிவிட்டுச் சென்றுவிடுவேன்."

இறக்கவும் தாயார்:

"எனது அம்மா, குழந்தைகள், மருமகள்கள், பேரக்குழந்தைகள், குடும்பத்தில் உள்ள அனைவரையும் நான் நேசிக்கிறேன். ஆனால், நான் எதையும் கேட்பதில்லை. நான் இறக்கத் தயாராக இருக்கிறேன். என் வாழ்க்கை நிறைவடைந்தது, கடவுள் விரும்பும் போதெல்லாம், அவர் என்னைத் தன்னுடன் அழைத்துச் செல்ல முடியும். நான் கடவுளுக்கு மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன், நான் பிரார்த்தனை செய்கிறேன், அவர் தொடர்ந்து கொடுத்து வருகிறார்," என்று அவர் மேலும் கூறினார்.