உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் நேற்றைய மூன்றாவது நாளில், இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 296 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்து ஆட்டமிழந்தது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 173 ரன்கள் முன்னிலை பெற்றது. இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. அந்த அணி 2 ரன்களில் முதல் விக்கெட்டை இழக்க, அப்போது மரான்ஷ் லாபுஷேன் டிரஸ்ஸிங் ரூமில் அமர்ந்து தூங்கும் வீடியோ இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது.
3 வதாக களமிறங்குவதற்கு காத்திருந்த லாபுஷேன், டிரஸ்ஸிங் அறையின் பால்கனியில் அமர்ந்திருந்தார். டெஸ்ட் போட்டிகள் மிகவும் மெதுவாக நகரும் என்பதால் காத்திருந்த லாபுஷேன், அப்படியே படுத்து தூங்கிவிட்டார். இதனிடையே, 2வது இன்னிங்ஸின் நான்காவது ஓவரில் டேவிட் வார்னரின் விக்கெட்டை முகமது சிராஜ் வீழ்த்தினார்.
தூங்கி கொண்டிருந்த மரான்ஷ் லாபுஷேன் ஸ்டேடியத்தில் இருந்த பார்வையாளர்களின் சத்தம் கேட்டு, அவர் திடீரென எழுந்தார், இந்த வேடிக்கையான சம்பவம் அனைவரையும் சிரிக்கை வைத்தது. அந்த வீடியோவில், மரான்ஷ் லாபுஷேன் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார். திடீரென எழுந்து அவசரமாக பேட்டிங் செய்ய ஓடினார்.
3 நாளில் என்ன நடந்தது..?
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் 3வது நாள் தொடக்கத்தில் கே.எஸ். பரத் 5 ரன்களில் ஆட்டமிழக்க, அதன் பின்னர் ரஹானேவுடன் ஷர்துல் தாக்கூர் இணைந்தார். இந்திய அணியின் நம்பிக்கை தூணாக இருந்து இக்கட்டான சூழலில் ரஹானே அரைசதம் விளாசி சிறப்பாக ஆடினார். மதிய உணவு இடைவேளைக்குப் பின்னர் தனது அதிரடி ஆட்டத்தினால் சதம் விளாசுவார் என எதிர்பார்க்கப்பட்ட ரஹானே 89 ரன்னில் தனது விக்கெட்டை 7வது விக்கெட்டுக்கு 109 ரன்களின் முக்கியமான பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
அதன் பின்னர் ஷர்துல் தாக்கூர் பொறுப்பான ஆடி அரைசத்தினை எட்டி தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இறுதியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 296 ரன்கள் சேர்த்தது. இதன் மூலம் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 173 ரன்கள் முன்னிலையில் இருந்தது.
இதையடுத்து, இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 123 ரன்கள் சேர்த்துள்ளது. இதனால் மூன்றாவது நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 296 ரன்கள் முன்னிலை வகிக்கிறது. களத்தில் லாபுஷேன் 41 ரன்களிலும், க்ரீன் 7 ரன்களிலும் உள்ளனர்.