உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நாளை மறுநாள் இங்கிலாந்து நாட்டில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது. ஆஸ்திரேலியாவுடன் மோதும் இந்த போட்டியில் இந்திய அணியின் நம்பிக்கையாக திகழ்வது கிங் கோலி என அழைக்கப்படும் விராட்கோலி.


கடந்த 2022ம் ஆண்டு ஆசிய கோப்பை முதல் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் விராட்கோலி, நடைபெற்று முடிந்த ஐ.பி.எல். தொடரிலும் 2 சதங்களை விளாசி தான் எப்போதும் கிங் என்பதை நிரூபித்தார்.


இந்த நிலையில், ஆஸ்திரேலிய அணியின் முக்கிய இலக்காக இருக்கும் விராட்கோலி இதுவரை சாம்பியன்ஸ் கோப்பைக்கான இறுதிப்போட்டியில் இதுவரை எடுத்துள்ள ரன் விவரங்களை கீழே காணலாம்.


விராட்கோலி இதுவரை 5 முறை சாம்பியன்ஸ் டிராபிக்கான இறுதிப்போட்டிகளில் ஆடியுள்ளார்.


2011 உலககோப்பை:


2011ம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் விராட்கோலி 49 பந்துகளில் 35 ரன்கள் விளாசினார்.


2013 சாம்பியன்ஸ் டிராபி:


இங்கிலாந்து அணிக்கு எதிரான 2013ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை கைப்பற்றுவதற்கான இறுதிப்போட்டியில் 34 பந்துகளில் 43 ரன்கள் விளாசினார்.


2014 டி20 உலககோப்பை:


2014ம் ஆண்டு டி20 உலககோப்பை இறுதிப்போட்டியில் இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 58 பந்துகளில் 77 ரன்களை விராட்கோலி விளாசினார்.


2015ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி:


2015ம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் 9 பந்துகளில் 5 ரன்கள் விளாசினார்.


2021 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்:


கடந்த 2021ம் ஆண்டு நியூசிலாந்து அணிக்கு எதிரான  ஆட்டத்தில் விராட்கோலி முதல் இன்னிங்சில் 44 ரன்களும், 2வது இன்னிங்சில் 13 ரன்களும் எடுத்தார்.


 இதில் 2011ம் ஆண்டு உலககோப்பையையும், 2013ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியையும் இந்திய அணி கைப்பற்றியது.


கடந்த ஓராண்டாக அசுர ஃபார்மில் உள்ள விராட்கோலி ஓவல் மைதானத்திலும் தனது ஆதிக்கத்தை செலுத்தினால் இந்திய அணி நிச்சயம் மகுடத்தை சூடும். விராட்கோலி இதுவரை 108 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 28 சதங்கள், 7 இரட்டை சதங்கள் மற்றும் 28 அரைசதங்களுடன் 8 ஆயிரத்து 416 ரன்கள் விளாசியுள்ளார்.


ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக என்றாலே விராட்கோலி மிகவும் அபாரமாக ஆடுவார், அதற்கு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான அவரது ஃபெர்பாமென்சே சான்றாகும்.


மேலும் படிக்க: WTC Final 2023: “இந்தியாவ சமாளிச்சுடலாம்.. ஆனால் கோலியை நெனச்சாதான் பயமா இருக்கு” - வீடியோவில் ஆஸ்திரேலிய அணி..!


மேலும் படிக்க: WTC 2023 Final: ஐபிஎல் போல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் மழை குறுக்கிட்டால் என்ன நடக்கும்? விபரம் இதோ..!