உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நாளை மறுநாள் இங்கிலாந்தின் ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது. சாம்பியன் பட்டத்தை கைப்பற்றுவதற்கான இந்த மோதலில் இந்தியா – ஆஸ்திரேலிய அணிகள் மோதுகின்றன.


இந்திய அணியை பொறுத்தவரையில் இந்திய அணியின் பேட்டிங்கில் மிகப்பெரிய நம்பிக்கை முன்னாள் கேப்டன் விராட்கோலியும், கேப்டன் ரோகித்சர்மாவுமே. புஜாரா, ரஹானே ஆகிய அனுபவ வீரர்களுடன் சுப்மன்கில் இருந்தாலும் ரோகித்சர்மா – விராட்கோலி இருவரும் ஆட்டத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் வீரர்கள் ஆவார்கள். மேலும், ஐ.சி.சி. சாம்பியன் கோப்பைகளுக்கான இறுதி ஆட்டங்களில் ஆடிய அனுபவம் நிரம்பியவர்கள். இந்த நிலையில், ரோகித்சர்மா இதுவரை சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப்போட்டிகளில் ஆடிய விவரங்களை கீழே காணலாம்.


ரோகித்சர்மா:


 இந்திய கேப்டன் ரோகித்சர்மா இதுவரை ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பைகளுக்காக 5 முறை இறுதிப்போட்டிகளில் ஆடியுள்ளார்.


2007 டி20 உலககோப்பை:


2007ம் ஆண்டு நடந்த டி20 உலககோப்பை இறுதிப்போட்டியில் முதன்முறையாக ரோகித்சர்மா சாம்பியன் கோப்பை ஒன்றிற்கான இறுதிப்போட்டியில் களமிறங்கினார். அந்த போட்டியில் 16 பந்தில் 30 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார்.


2013 சாம்பியன்ஸ் டிராபி:


மினி உலககோப்பை எனப்படும் சாம்பியன்ஸ் டிராபிக்காக 2013ம் ஆண்டு நடந்த போட்டியில் இங்கிலாந்திற்கு எதிரான இறுதிப்போட்டியில் களமிறங்கிய ரோகித்சர்மா 14 பந்தில் 9 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.


2014 டி20 உலககோப்பை:


டி20 உலககோப்பையை 2வது முறையாக கைப்பற்றும் வாய்ப்பிற்காக இந்தியா 2014ம் ஆண்டு இலங்கையுடன் இறுதிப்போட்டியில் மோதியது. அந்த போட்டியில் ரோகித்சர்மா 26 பந்துகளில் 29 ரன்கள் மட்டுமே ரோகித் எடுத்தார்.


2015 சாம்பியன்ஸ் டிராபி:


சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றுவதற்காக 2015ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ரோகித்சர்மா டக் அவுட்டாகி ஆட்டமிழந்தார்.


உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2021:


கடந்த 2021ம் ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் முதல் இன்னிங்சில் 34 ரன்களும், 2வது இன்னிங்சில் 30 ரன்களும் ரோகித்சர்மா எடுத்தார்.


மேற்கண்ட போட்டிகளில் இந்திய அணி 2007 டி20 உலககோப்பையும், 2013 சாம்பியன் டிராபியையும் கைப்பற்றியது. மற்ற ஆட்டங்களில் இந்திய அணி தோல்வியையே தழுவியது.


36 வயதான ரோகித்சர்மா இதுவரை 49 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 9 சதங்கள், 1 இரட்டை சதம், 14 அரைசதங்கள் என மொத்தம் 3 ஆயிரத்து 3379 ரன்களை விளாசியுள்ளார். அதிகபட்சமாக 212 ரன்கள் எடுத்துள்ளார். இந்திய அணியின் கேப்டன் ரோகித்சர்மாவின் பேட்டிங் சமீபகாலமாக கவலைக்குரிய வகையிலே உள்ளது. களத்தில் சிறிது நேரம் நின்றாலே ஆட்டத்தை மாற்றும் வல்லமை கொண்ட ரோகித்சர்மா நடந்து முடிந்த ஐ.பி.எல். தொடரில் பெரியளவில் பேட்டிங்கில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. மேலும், குவாலிபயர் ஆட்டத்தில் குஜராத் அணியுடன் தோல்வியை தழுவி அவரது தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி வெளியேறியது. 


மேலும் படிக்க: WTC Final 2023: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி டிராவில் முடிந்தால் என்னாகும்? ரிசர்வ் டே இருக்கா?


மேலும் படிக்க: WTC Final Pitch Report: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்.. இறுதிப்போட்டி நடக்கும் ஓவல் மைதானம் எப்படி? வரலாறு சொல்வது என்ன? - ஓர் அலசல்