2021- 23 டெஸ்ட் சாம்பியனவதற்கு இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் ஜூன் 7ம் தேதி (நாளை) முதல் 11 ம் தேதி வரை மோத இருக்கின்றன. இந்த இறுதிப்போட்டியானது லண்டனில் உள்ள கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் இந்திய நேரப்படி மதியம் 3 மணிக்கு தொடங்குகிறது. 


ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் 2021-23 லீக் போட்டியின் அடிப்படையில் இறுதிப் போட்டிக்கு இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் முன்னேறியுள்ளன. இந்த போட்டிக்கு ஏற்கனவே விளையாடும் 11 அணியை ஆஸ்திரேலியா அணி அறிவித்த நிலையில் இந்திய அணியின் வெலன் எது என்று இந்திய ரசிகர்கள் ஆர்வமாய் காத்திருக்கின்றனர். கேப்டன் ரோகித் சர்மாவிற்கு விளையாடும் லெவனை தேர்வு செய்வது அவ்வளவு எளிதானது அல்ல. இதையடுத்து இந்திய அணியின் விக்கெட் கீப்பராக யார் இருப்பார்கள் என்ற கேள்வி அனைவரது மனதிலும் எழுந்துள்ளது. 


இஷான் கிஷன் : 


உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இஷான் கிஷனுக்கு வாய்ப்பு அளிப்பதை பெரும்பாலான முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் வேண்டாம் என பேசி வருகின்றன. ஏனெனில், இஷான் கிஷன் அதிரடிக்கு பெயர் போனவர். லண்டன் ஓவல் மைதானம் போன்ற பிட்ச்கள் வேகத்திற்கு அதிக ஒத்துழைப்பு தரும். இதுபோன்ற சூழ்நிலைகளில் அதிரடியாக விளையாடினால் விக்கெட்களை இழக்க நேரிடும். இஷான் கிஷன் மற்றும் ரிஷப் பண்ட் ஆடும் விதம் ஏறக்குறைய ஒரே மாதிரியாக இருக்கும். எனவே, பெரும்பாலும் இஷான் கிஷனை ரோகித் சர்மா இந்த போட்டியில் தவிர்ப்பார் என்றே கூறப்படுகிறது. 


கே.எஸ். பாரத்: 


ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அறிமுகமான கே.எஸ். பாரத் நிதானமாக ஆடும் திறன் கொண்டவர். பெரும்பாலும் இதுபோன சூழ்நிலையில் இவரது பேட்டிங் திறமையே கைகொடுக்கும். கே.எஸ்.பாரத் இதுவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் தன்னை நிரூபிக்க முடியவில்லை என்றாலும், உள்நாட்டு கிரிக்கெட்டிலும், லிஸ்ட் ஏ வடிவத்திலும் அவர் நிறைய ரன்கள் எடுத்துள்ளார். 


உள்நாட்டு கிரிக்கெட்டில் இருவரது செயல்திறன் எப்படி..?


டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது அறிமுகத்திற்காக காத்திருக்கும் இஷான் கிஷான், லிஸ்ட் ஏ கேரியரில் 91 போட்டிகளில் 37.76 சராசரியுடன் 3059 ரன்கள் எடுத்துள்ளார்.இதில், 5 சதங்களும், 15 அரைசதங்களும் அடங்கும். லிஸ்ட் ஏ வடிவத்தில் இவரது அதிகபட்ச ஸ்கோர் 210 ரன்கள். இது தவிர விக்கெட் கீப்பிங்கில் 93 கேட்ச்கள் மற்றும் 11 ஸ்டம்பிங் செய்துள்ளார். 


கேஎஸ் பாரத் 64 லிஸ்ட் ஏ போட்டிகளில் 33.62 சராசரியில் 1950 ரன்கள் எடுத்துள்ளார். இதில்,  6 சதங்களும், 6 அரைசதங்களும் அடங்கும். இவரது அதிகபட்ச ஸ்கோர் 161* . விக்கெட் கீப்பிங்கில் பாரத் 69 கேட்சுகள் மற்றும் 13 ஸ்டம்பிங் செய்துள்ளார். 


ஹெட் டூ ஹெட் 


இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே இதுவரை மொத்தம் 106 டெஸ்ட் போட்டிகள் நடந்துள்ளன, இதில் ஆஸ்திரேலியா 44 வெற்றிகளுடன் தனது ஆதிக்கத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது. இதில் இந்தியா 32 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. 


நேரடி ஒளிபரப்பு


இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே நடைபெறும் இந்த இறுதிப் போட்டி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் மூலம் டிவியில் நேரடியாக ஒளிபரப்பப்படும். தூர்தர்ஷனில் போட்டியின் நேரடி ஒளிபரப்பு இலவசம். இது தவிர, போட்டியை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மூலம் நேரடியாக ஒளிபரப்ப வேண்டும், இதன் மூலம் நீங்கள் மொபைலிலும் இந்த போட்டியை நேரலையில் பார்க்கலாம். 


இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா கணிக்கப்பட்ட இந்திய அணி: 


இந்தியா - ரோகித் சர்மா (கேப்டன்), ஷுப்மான் கில், சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி, அஜிங்க்யா ரஹானே, கேஎஸ் பாரத் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், முகமது ஷமி, முகமது சிராஜ், ஷர்துல் தாக்கூர்.


ஆஸ்திரேலியா - டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபுசாக்னே, ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட், கேமரூன் கிரீன், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), மிட்செல் ஸ்டார்க், பாட் கம்மின்ஸ் (கேப்டன்), நாதன் லியான், ஸ்காட் போலண்ட்.