பெண்களுக்கான ஐபிஎல் எப்போது நடக்கும் என்று காத்திருந்த நிலையில் அதற்கான அணிகள் முடிவு செய்யப்பட்டு, ஏலமும் விடப்பட்டு விட்டது. ஒவ்வொரு அணியும் இப்போது 15 முதல் 18 வீரங்கனைகளுடன் முழுமை பெற்று விளையாட தயார் ஆகி விட்டனர். எதிர்பார்த்தது போலவே ஸ்ம்ரிதி மந்தனாவை வாங்க அணிகள் போட்டி போட்ட நிலையில், பெங்களூரு அவரை 3.40 கோடிக்கு ஏலம் எடுத்தது. இந்த ஏலத்தில் அதிக தொகைக்கு ஏலம் சென்ற நபராக அவர் உள்ளார். மேலும் ஹர்மன் ப்ரீத் கவுர், எல்லிஸ் பெர்ரி ஆகியோரும் கோடிக்கணக்கில் ஏலம் சென்றனர். இப்போது ரசிகர்களின் கேள்வி என்னவென்றால் ஒவ்வொரு அணியும் சரியாக வீரங்கனைகளை எடுத்துள்ளனரா, வெற்றி பெருவதற்குரிய பேலன்ஸ் அணியில் உள்ளதா என்பதுதான்.



மும்பை இந்தியன்ஸ்


குறிப்பாக மும்பை அணி ஆண்கள் ஐபிஎல்-இல் மிகவும் பிரபலமான ஒரு அணியாகும். பெண்கள் அணி மீதும் அதே எதிர்பார்ப்பு இருக்கும். அதில் இன்னொரு விஷயம் என்னவென்றால் மும்பை அணிக்கு ஹர்மன்ப்ரீத் கவுர் பெரும் தொகைக்கு எடுக்கப்பட்ட நிலையில், இந்திய ஆண்கள் அணி கேப்டனும், இந்திய பெண்கள் அணி கேப்டனும் மும்பை இந்தியன்ஸ் அணியை சேர்ந்தவர்கள் என்று பெயர் பெற்றுள்ளது. இப்போது மும்பை அணி தக்க பலத்துடன் இருக்கிறதா என்பதை பார்போம்.


வாங்கிய வீரர்களின் எண்ணிக்கை: 17


செலவழித்த பணம்: 12 கோடி ரூபாய் (முழுமையாக செலவு செய்தனர்)


தொடர்புடைய செய்திகள்: Valentines Day Wishes: ஏதாவது ஒன்று சொல்! பொறுப்பதா? போவதா? - உங்கள் காதலை சக்சஸ் ஆக்க நச் கவிதைகள்!


முக்கிய வீரர்கள்


ஹர்மன்ப்ரீத் கவுர், நாட் ஸ்கிவர்-பிரண்ட் மற்றும் பூஜா வஸ்த்ரகர் ஆகியோர் ஸ்கோர் கார்டில் முதல் இடங்களில் இருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. மும்பையில் தான் ஹர்மன்ப்ரீத் 2013 இல் முதல் உலகக் கோப்பை சதத்துடன் தன்னை ஒரு பெரிய வீராங்கனையாக நிரூபித்தார். அவர் மும்பை இந்தியன்ஸின் கேப்டனாக இந்திய பெண்கள் கிரிக்கெட்டில் ஒரு புதிய சகாப்தத்தை தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வேகம் மற்றும் சுழலுக்கு எதிராக ஸ்கிவர்-பிரண்டின் பேட்டிங் பன்முகத்தன்மை உதவும், அதே போல் அவரது தரமான மீடியம் பேஸ் பந்துவீச்சு மற்றொரு பலம். பூஜா வஸ்த்ராகர்தான் இந்த அணியின் மூலக்கூறாக இருப்பார். ஒரு பிக் ஹிட்டராக கடைசி ஓவர்களில் செயல்படுவார், மேலும் மிடில் ஓவர்களில் அதிரடியாக பந்துவீசி விக்கெட்டுகள் எடுப்பதில் கேட்டிக்க்காரர் என்பதால் 2018,2019 சமயங்களின் ஹர்திக் பாண்டியாவாக அணியை பல முறை காப்பாற்றவல்லவர்.






பலம் மற்றும் பலவீனம்


பலம்: எல்லா இடங்களுக்கும் பேக்-அப்கள் வைத்திருப்பது ஒரு பெரிய பலம், மேலும் வலுவான ஹிட்டர்களை கொண்ட அணியாக மீண்டும் உருவாக்கி இருப்பது மும்பை இந்தியன்ஸ் அணிக்கே ஆன பெருமை. மேலும் 19 வயதுக்குட்பட்ட வீராங்கனைகள் பலரையும் சேர்த்துள்ளனர். இதனால் எதிர்காலம் இன்னும் சிறப்பாக இருக்க அவர்களை வெற்றிகரமான வீரங்கனைகளாக உருவாக்குவார்கள். 


பலவீனம்: யாஸ்திகா பாட்டியாவுக்கு பேக் அப் விக்கெட் கீப்பர் இல்லாதது சற்று தடையாக இருக்கலாம். வஸ்த்ரகரைத் தாண்டி, அவர்களிடம் இந்திய வேகப்பந்து பந்துவீச்சு ஆப்ஷன் இல்லாதது ஒரு குறைதான்.