Ashleigh Gardner: பெத்மூனி போனா என்ன? சிக்ஸர் மழை பொழியும் ஆஷ்லே கார்ட்னர்!அலறும் ஆர்சிபி
WPL 2025 RCB vs GG:குஜராத் அணிக்காக அதிரடியாக ஆடிய பெத் மூனி ஆட்டமிழந்த நிலையில், கேப்டன் ஆஷ்லே கார்ட்னர் அதிரடியாக ஆடி வருகிறார்.

மகளிர் பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடர் இன்று குஜராத் மாநிலம் வரதோராவில் தொடங்கியுள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி கேப்டன் ஸ்மிரிதி மந்தனா முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
தனி ஆளாக போராடிய பெத்மூனி:
இதன்படி ஆட்டத்தை குஜராத் அணியின் நட்சத்திர வீராங்கனை பெத் மூனி - லாரா தொடங்கினர். ஆட்டம் தொடங்கியது முதல் லாரா சற்று தடுமாறினாார். ஆனால், பெத்மூனி நிதானமாகவும் ஏதுவான பந்துகளை அடித்தும் ஆடினார். தடுமாறிக் கொண்டிருந்த லாராவை 6 ரன்னில் ரேணுகா சிங் அவுட்டாக்கினார்.
அடுத்து வந்த தயாளன் ஹேமலாதவும் 4 ரன்னில் அவுட்டாக, நட்சத்திர வீராங்கனையும், கேப்டனுமாகிய கார்ட்னர் களமிறங்கினார். மறுமுனையில் கார்ட்னர் நிதானம் காட்ட பெத்மூனி ஏதுவான பந்துகளை பவுண்டரிக்கு தொடர்ந்து விரட்டினார். சிறப்பாடி ஆடிக்கொண்டிருந்த பெத்மூனி ஜார்ஜியா பந்தில் எல்பிடபுள்யூ ஆக , ரிவியூவில் நாட் அவுட் என்று தெரியவும் மீண்டும் சிறப்பாக ஆடி வருகிறார்.
ப்ரேமா சுழலில் சிக்கிய பெத்மூனி:
தற்போது அரைசதம் கடந்து ஆடி வரும் பெத்மூனிக்கு கார்ட்னரும் சிக்ஸர் அடித்து தனது அதிரடியைத் தொடங்க இந்த பார்ட்னர்ஷிப்பை உடைக்க ஆர்சிபி கேப்டன் மந்தனா பந்துவீச்சாளர்களை மாறி மாறி பயன்படுத்தி வருகிறார். ஜோஷிதா, ரேணுகா, கிம் கார்த், கனிகா, ஜார்ஜியா பலரையும் பயன்படுத்தியும் இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் தடுமாறினார்.
அப்போது ப்ரேமா ரேவத்தை கேப்டன் ஸ்மிரிதி மந்தனா அழைத்தார். அவரது முயற்சிக்கு உடனே பலன் கிடைத்தது. அவர் வீசிய முதல் ஓவரிலே பெத்மூனி தனது விக்கெட்டை பறிகொடுத்தார். சிறப்பாக ஆடி அரைசதம் கடந்த பெத்மூனி 56 ரன்னில் அவுட்டானார். அவர் 42 பந்துகளில் 8 பவுண்டரியுடன் இந்த ரன்னை எடுத்தார். தற்போது 86 ரன்களுக்கு 3 விக்கெட்டை இழந்து ஆடி வருகிறது.
கார்ட்னர் சிக்ஸர் மழை:
தற்போது கார்ட்னர் - தியேந்திரா டோட்டீன் ஆடி வருகி்னறனர். இன்னும் 8 ஓவர்கள் உள்ள நிலையில் குஜராத் அணி அதிரடியாகவே ஆட முயற்சிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குஜராத் அணிக்காக ஹர்லீன் தியோல், சிம்ரன், தனுஜா உள்ளனர். பெத்மூனியை அவுட்டாக்கிய ப்ரேமா வீசிய அடுத்த ஓவரில் தொடர்ந்து சிக்ஸர் அடித்து கார்ட்னர் அச்சுறுத்தினார். தற்போது கார்ட்னர் மிரட்டலாக பேட்டிங் செய்து வருகிறார்.