WPL 2025 Points Table: மகளீர் பிரீமியர் லீகின் புள்ளிப்பட்டியலில், எந்த அணி எந்த இடத்தில் உள்ளது என்பது கீழே விவரிக்கப்பட்டுள்ளது.

மகளிர் பிரீமியர் லீக்:

நடப்பாண்டிற்கான மகளிர் பிரீமியர் லீக் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மொத்தம் 5 அணிகள் பங்கேற்றுள்ள இந்த போட்டியில், 22 ஆட்டங்கள் நடைபெற உள்ளன. இந்நிலையில் நேற்று நடந்த நான்காவது போட்டியின் முடிவில், புள்ளிப்பட்டியலில் எந்த அணி எந்த இடத்தை பிடித்துள்ளது. முதல் இடத்தில் ஆதிக்கம் செலுத்துவது யார்? இன்றைய போட்டியின் முடிவுகள் புள்ளிப்பட்டியலில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பன விவரங்கள் கீழே விவரிக்கப்பட்டுள்ளன.

மகளிர் பிரீமியர் லீக் புள்ளிப்பட்டியல்:

அணிகள் போட்டிகள் வெற்றி தோல்வி புள்ளிகள் ரன்ரேட்
பெங்களூர் 2 2 0 4 1.440
குஜராத் 2 1 1 2 0.118
டெல்லி 2 1 1 2 -0.882
மும்பை 1 0 1 0 -0.050
உத்தரபிரதேசம் 1 0 1 0 -0.850

ஆதிக்கம் செலுத்தும் ஆர்சிபி:

நடப்பாண்டிற்கான மகளிர் பிரீமியர் லீகின் முதல் போட்டியிலேயே, 202 ரன்கள் என்ற இமாலய இலக்கை எட்டி பெங்களூர் அணி அபார வெற்றி பெற்றது. இந்த லீகின் வரலாற்றிலேயே அதிகபட்ச சேஸ் இதுவாகும். இந்நிலையில் நேற்று நடைபெற்ற டெல்லி அணிக்கு எதிரான போட்டியிலும், 142 ரன்கள் என்ற இலக்கை வெறும் 16.2 ஓவர்களில் எட்டி இரண்டாவது வெற்றியை பதிவு செய்துள்ளது. இதனால் புள்ளிப்பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. 

இன்றைய போட்டி:

வதோத்ரா மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 5வது லீக் போட்டியில், மும்பை மற்றும் குஜராத் அணிகள் மோத உள்ளன. இதில் குஜராத் அணி ஏற்கனவே 2 போட்டிகளில் விளையாடி, தலா ஒரு வெற்றி மற்றும் தோல்வியுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. மும்பை அணி தனது முதல் போட்டியில் நூலிழையில் டெல்லியிடம் வெற்றி வாய்ப்பை இழந்து புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது. இதனால் தங்களது இரண்டாவது போட்டியிலாவது வென்று, புள்ளிக்கணக்கை தொடங்க ஆர்வம் காட்டுகிறது. இதனால் இன்றைய போட்டியில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

புள்ளிப்பட்டியலில் தாக்கம்:

இன்றைய போட்டியில் குஜராத் அணி வெற்றி பெற்றால், 4 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தை வலுவாக தக்கவைத்துக்கொள்ளலாம். அதேநேரம், மும்பை அணி வெற்றி பெற்றால், புள்ளிக்கணக்கை தொடங்குவதோடு, புள்ளிப்பட்டியலில் டெல்லி அணியை பின்னுக்கு தள்ளி மூன்றாவது இடத்திற்கு முன்னேறலாம். இதனால், இன்றைய போட்டியின் வெற்றியாளர்கள் யார் என்பதை அறிய ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.