மகளிர் பிரீமியர் லீக் மினி ஏலம் மிகவும் பரபரப்பாக நடைபெற்றது. இதில் களமிறங்கிய 5 அணிகளும் தங்களது அணியை பலமான மற்றும் முழுமையான அணியாக உருவாக்க போட்டி போட்டனர்.
WPL ஏலம்:
மகளிர் பிரீமியர் லீக்கின் (WPL) 2024 ஆண்டு சீசனுக்காக 18 வீராங்கனைகளை டெல்லி கேபிடல்ஸ் வாங்கியுள்ளது. ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டர் அனபெல் சதர்லேண்டைப் வாங்குவதற்காக டெல்லி கேப்பிடல்ஸ் அணி ஒரு பெரிய தொகையைச் செலவழித்துள்ளது. டெல்லி அணி ஆஸ்திரேலியாவின் நம்பிக்கை நட்சத்திரமான அனபெல் சதர் லேண்டை 2 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளனர். அவர்கள் மும்பை இந்தியன்ஸ் (MI) உடன் தீவிரமாக ஏலத்தில் ஈடுபட்டிருந்தனர்.
ஆனால் இறுதியில் MI போட்டியில் இருந்து விலகிய பிறகு வீரரைப் பெற முடிந்தது. அவர்கள் பர்ஸில் வெறும் 25 லட்சங்கள் மட்டுமே இருந்தது, மேலும் அவர்கள் அபர்ணா மோண்டல் (10 லட்சம்), அஷ்வனி குமாரி (10 லட்சம்) ஆகிய இரு அன்கேப் பிளேயர்களை (அதாவது சர்வதேச போட்டிகளில் விளையாடாத வீராங்கனைகள்) தங்கள் அணிக்காக வாங்கியுள்ளனர்.
மகளிர் பிரீமியர் லீக் 2024ஆம் ஆண்டுக்கான ஏலத்திற்கு முன்பு, டெல்லி கேப்பிட்டல்ஸ் 15 வீராங்கனைகளை தக்க வைத்துக் கொண்டது. குறிப்பிடத்தக்க வீராங்கனைகள் யார் என்றால், ஷஃபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், மரிசானே கப் மற்றும் அணியின் கேப்டன் மெக் லானிங் ஆகியோரை டெல்லி அணி தக்கவைத்துக் கொண்டது.
WPL 2024 ஏலத்தில் எடுக்கப்பட்ட வீராங்கனைகள்: அனாபெல் சதர்லேண்ட் (ரூபாய் 2 கோடி), அபர்ணா மோண்டல் ( ரூபாய் 10 லட்சம்), அஷ்வனி குமாரி (ரூபாய் 10 லட்சம்).
WPL 2024 ஏலத்திற்கு முன்னதாக டெல்லி கேபிடல்ஸ் அணி:
தக்கவைக்கப்பட்ட வீராங்கனைகள்: ஆலிஸ் கேப்சி, அருந்ததி ரெட்டி, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஜெஸ் ஜோனாசென், லாரா ஹாரிஸ், மரிசானே கப், மெக் லானிங், மின்னு மணி, பூனம் யாதவ், ராதா யாதவ், ஷஃபாலி வர்மா, ஷிகா பாண்டே, சினேகா தீப்தி, தன்யா தீப்தியா, டைட்டாஸ் சாது.
WPL 2024க்கான டெல்லி கேப்பிடல்ஸ் முழு அணி
ஆலிஸ் கேப்ஸி, அருந்ததி ரெட்டி, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஜெஸ் ஜோனாசென், லாரா ஹாரிஸ், மரிசன்னே கப், மெக் லானிங், மின்னு மணி, பூனம் யாதவ், ராதா யாதவ், ஷஃபாலி வர்மா, ஷிகா பாண்டே, சினேகா தீப்தி, தனியா பாட்டியா, டைட்டாஸ் மோன்டால் சாது, அஸ்வனி குமாரி
டெல்லி அணி கடந்த சீசனில் இறுதிப் போட்டிவரை முன்னேறி மும்பை அணியிடம் தோல்வியைத் தழுவியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இன்று நடைபெற்ற ஏலத்தில் ஆஸ்திரேலியா ஆல் ரவுண்டர் அனாபெல் சதர்லேண்டுக்காக ரூபாய் 2 கோடி கொடுத்து எடுத்துள்ளது.
வளர்ந்து வரும் இளம் நட்சத்திரமான அனபெல் இதுவரை 22 டி20 போட்டிகளில் விளையாடி 97 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். ஆனால் இதில் இவர் பவுண்டரிகள் மட்டும் 17 விளாசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் பந்து வீச்சில் 10 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.