2023 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட முதலாவது மகளிர் பிரீமியர் லீக் தொடர் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்ததை விடவும் அதிகப்படியான வரவேற்பினைப் பெற்றது. களமிறங்கிய 5 அணிகளும் ஒவ்வொரு போட்டியிலும் சிறப்பாக விளையாடியதால் போட்டி ரசிகர்களுக்கு நல்ல கிரிக்கெட் விருந்தாக அமைந்தது. முதலாவது சீசனை மும்பை இந்தியன்ஸ் அணி கைப்பற்றி அசத்தியது.
WPL ஏலம்:
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையில் WPL 2023 இறுதிப் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸை (DC) தோற்கடித்து தொடக்க சாம்பியன் ஆனது. இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி நேற்று அதாவது சனிக்கிழமை (டிசம்பர் 9) மும்பையில் நடந்த WPL ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் தனது அணியை வலுப்படுத்த முயற்சி செய்தனர். அதில் ஒரு சில முயற்சிகள் அணிக்கு வெற்றியைத் தந்தது.
ஆனால் ஆஸ்திரேலியா அணியின் இளம் ஆல்-ரவுண்டர் அனபெல் சதர்லேண்டை வாங்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியது மும்பை அணி நிர்வாகம். ஆனால் அந்த முயற்சி மும்பை அணிக்கு வெற்றியைத் தரவில்லை. இறுதியில் அனபெல்லாவை டெல்லி கேப்பிடல்ஸ் அணி ரூபாய் இரண்டு கோடிக்கு தட்டித் தூக்கியது. மும்பை அணி வாங்கிய வீராங்கனைகளில் மிகவும் பலமான வீராங்கனை என்றால், அது தென்னாப்பிரிக்கா அணியின் வலது கை வேகப்பந்து வீச்சாளர் ஷப்னிம் இஸ்மாயிலை ரூபாய் 1.2 கோடிக்கு எடுத்ததுதான் எனலாம்.
அதன் பின்னர் எஸ் சஞ்சனா மற்றும் அமந்தீப் கவுர் கீர்த்தனா பாலகிருஷ்ணன் மற்றும் பாத்திமா ஜாஃபர் ஆகியோரை வாங்கியுள்ளது. இதில் எஸ் சஜனாவை ரூபாய் 15 லட்சத்துக்கும், அமந்தீப் கவுர், பாத்திமா ஜாஃபர் மற்றும் கீர்த்தனா பாலகிருஷ்ணனை தலா ரூபாய் 10 லட்சத்துக்கும் ஏலத்தில் எடுத்தனர்.