முதலாவது மகளிர் பிரீமியர் லீக் போட்டியானது 5 அணிகளுடன் இந்தாண்டு களமிறங்கியது. இந்த தொடரானது இந்தியன் பிரீமியர் லீக்கை போன்று, மகளிர் பிரீமியர் லீக் தொடரையும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ஏற்பாடு செய்து நடத்தி வருகிறது. 

மகளிர் பிரீமியர் லீக் தொடரானது கடந்த மார்ச் 4ம் தேதி தொடங்கி வருகின்ற மார்ச் 26ம் தேதி வரை நடைபெறுகிறது. மொத்தம் 22 போட்டிகள் என கணக்கிடப்பட்டு மும்பையில் உள்ள இரண்டு மைதானங்களில் இந்த தொடர் நடத்தப்பட்டு வருகிறது. 

பங்கேற்றுள்ள அணிகள்: 

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி), மும்பை இந்தியன்ஸ் (எம்ஐ), டெல்லி கேபிடல்ஸ் (டிசி), குஜராத் ஜெயண்ட்ஸ் (ஜிஜி) மற்றும் யுபி வாரியர்ஸ் (யுபிடபிள்யூ) ஆகிய ஐந்து அணிகள் இந்த முதல் சீசனில் பங்கேற்கின்றன. 

புள்ளிகள் எப்படி?

இந்த தொடரில் வெற்றிபெறும் ஒவ்வொரு அணியும் இரண்டு புள்ளிகளை பெறும். போட்டி டையில் முடிந்தால் சூப்பர் ஓவர் அடிப்படையில் முடிவு தீர்மானிக்கப்படும். எதிர்பாராத காரணங்களால் போட்டி நடைபெறவில்லை என்றால் இரு அணிகளும் தலா ஒரு புள்ளியைப் பெறும்.

நாக் அவுட் சுற்றுகள்: 

மார்ச் 24- எலிமினேட்டர் போட்டி, மார்ச் 26 - இறுதிப் போட்டி

தற்போதுவரை மகளிர் பிரீமியர் லீக் தொடரில் நான்கு போட்டிகள் நடைபெற்றுள்ளது. அதில், ஹர்மன்பிரீத் தலைமையிலான மும்பை அணி விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்று முதலிடத்தில் உள்ளது. குஜராத் அணி இரண்டு தோல்விகளுடன் நிகர ரன் ரேட் அடிப்படையில் கடைசி இடத்தில் உள்ளது. 

புள்ளிப்பட்டியல்:

குழுபோட்டிவெற்றி தோல்விபுள்ளிகள்நிகர ரன் ரேட்
மும்பை இந்தியன்ஸ்2104+5.185
டெல்லி கேபிடல்ஸ்1102+3.000
UP வாரியர்ஸ்1102+0.374
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்2020-3.176
குஜராத் ஜெயண்ட்ஸ்2020-3.765

மீதமுள்ள போட்டி விவரங்கள்:

DATEபோட்டி விவரம்நேரம்இடம்
மார்ச்-07டெல்லி கேபிடல்ஸ் vs UP வாரியர்ஸ்07:30 PM ISTDY பாட்டீல் ஸ்டேடியம்
மார்ச்-08குஜராத் ஜெயண்ட்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்07:30 PM ISTபிரபோர்ன் - சிசிஐ
மார்ச்-09டெல்லி கேபிடல்ஸ் vs மும்பை இந்தியன்ஸ்07:30 PM ISTDY பாட்டீல் ஸ்டேடியம்
மார்ச்-10ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs யுபி வாரியர்ஸ்07:30 PM ISTபிரபோர்ன் - சிசிஐ
மார்ச்-11குஜராத் ஜெயண்ட்ஸ் vs டெல்லி கேபிடல்ஸ்07:30 PM ISTDY பாட்டீல் ஸ்டேடியம்
மார்ச்-12UP வாரியர்ஸ் vs மும்பை இந்தியன்ஸ்07:30 PM ISTபிரபோர்ன் - சிசிஐ
மார்ச்-13டெல்லி கேபிடல்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்07:30 PM ISTDY பாட்டீல் ஸ்டேடியம்
மார்ச்-14மும்பை இந்தியன்ஸ் vs குஜராத் ஜெயண்ட்ஸ்07:30 PM ISTபிரபோர்ன் - சிசிஐ
மார்ச்-15UP வாரியர்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்07:30 PM ISTDY பாட்டீல் ஸ்டேடியம்
மார்ச்-16டெல்லி கேபிடல்ஸ் vs குஜராத் ஜெயண்ட்ஸ்07:30 PM ISTபிரபோர்ன் - சிசிஐ
மார்ச்-18மும்பை இந்தியன்ஸ் vs UP வாரியர்ஸ்03:30 PM ISTDY பாட்டீல் ஸ்டேடியம்
மார்ச்-18ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs குஜராத் ஜெயண்ட்ஸ்07:30 PM ISTபிரபோர்ன் - சிசிஐ
மார்ச்-20குஜராத் ஜெயண்ட்ஸ் vs UP Warriorz03:30 PM ISTபிரபோர்ன் - சிசிஐ
மார்ச்-20மும்பை இந்தியன்ஸ் vs டெல்லி கேபிடல்ஸ்07:30 PM ISTDY பாட்டீல் ஸ்டேடியம்
மார்ச்-21ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs மும்பை இந்தியன்ஸ்03:30 PM ISTDY பாட்டீல் ஸ்டேடியம்
மார்ச்-21UP வாரியர்ஸ் vs டெல்லி கேபிடல்ஸ்07:30 PM ISTபிரபோர்ன் - சிசிஐ
மார்ச்-24எலிமினேட்டர்07:30 PM ISTDY பாட்டீல் ஸ்டேடியம்

மார்ச் 26 - இறுதிப் போட்டி