ஆண்கள் ஐபிஎல் தொடர் போன்று பெண்களுக்கென பிரத்யேக மகளிர் பீரிமியர் லீக் இந்தாண்டு முதல் பிசிசிஐ நடத்தி வருகிறது. இந்த மகளிர் பிரீமியர் லீக் தொடரில் மொத்தம் 5 அணிகள் பங்கேற்று வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. 


4ம் தேதி தொடங்கி வருகின்ற மார்ச் 26ம் தேதி வரை நடைபெறுகிறது. இறுதிப்போட்டியானது மும்பையில் உள்ள டி.ஒய் பாட்டீல் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. 


இந்தநிலையில் சர்வதேச மகளிர் தினத்தன்று நடைபெறும் குஜராத் ஜெயண்ட்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் இடையேயான போட்டியை பெண்கள், சிறுமிகள் மற்றும் ஆண்கள் உள்பட அனைவரும் இலவசமாக காணலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மகளிர் பிரிமியர் லீக்கின் அதிகாரப்பூர்வ ட்விட்டரில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.






முன்னதாக, மகளிர் கிரிக்கெட் தொடரில் நடைபெறும் அனைத்துப் போட்டிகளையும் பெண்கள் மற்றும் சிறுமிகள் மைதானங்களுக்குள் இலவச பார்க்கலாம் என்று பிசிசிஐ அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 


பங்கேற்றுள்ள அணிகள்: 



  • ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி)

  • மும்பை இந்தியன்ஸ் (எம்ஐ)

  • டெல்லி கேபிடல்ஸ் (டிசி)

  • குஜராத் ஜெயண்ட்ஸ் (ஜிஜி)

  • யுபி வாரியர்ஸ் (யுபிடபிள்யூ) 


தற்போதைய புள்ளி விவரம்:


மகளிர் பிரீமியர் லீக் தொடரில் தொடங்கி மூன்று நாட்களில் நான்கு போட்டிகள் நடைபெற்றுள்ளது. இதில்,  ஹர்மன்பிரீத் தலைமையிலான மும்பை அணி விளையாடிய 2 போட்டிகளிலும் வெற்றிபெற்று முதலிடத்தில் உள்ளது. குஜராத் அணி 2 போட்டிகளில் விளையாடி இரண்டு தோல்விகளுடன் நிகர ரன் ரேட் அடிப்படையில் கடைசி இடத்தில் உள்ளது.  பெங்களூர் அணி 2 தோல்விகளுடன் கடைசி இடத்திற்கு முன்னால் உள்ளது. 


இன்றைய போட்டி:


மகளிர் பிரீமியர் லீக் இன்றைய போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியும், உபி வாரியர்ஸ் அணியும் நேருக்குநேர் மோதுகின்றன. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியாவின் இரண்டு சிறந்த வீராங்கனைகளான மெல் லானிங் மற்றும் அலிசா ஹீலி தலைமையில் இரண்டு அணிகளும் களமிறங்குகிறது. மும்பையில் உள்ள டாக்டர் டிஒய் பாட்டீல் ஸ்போர்ட்ஸ் அகாடமி மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது. இந்த போட்டியை ஸ்போர்ட்ஸ்18 நெட்வொர்க்கில் நேரடியாக காணலாம். இந்தப் போட்டியின் லைவ் ஸ்ட்ரீமிங்கைப் பார்க்க விரும்பும் ரசிகர்கள் JioCinema ஆப்ஸ் மற்றும் இணையதளத்தில் இலவசமாகப் பார்க்கலாம்.