கடந்த மாதம் மும்பையில் நடைபெற்ற மகளிர் பிரீமியர் லீக் ஏலத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் வலிவான அணிகளாக தோன்றினர். இருப்பினும், ராயல் சேலஞ்சர்ஸ் அணி தனது தொடக்க லீக் ஆட்டத்தின் முதல் பாதியில் எதிர்பார்த்த அளவிற்கு ஜொலிக்க வில்லை என்பதே உண்மை.
பெங்களூர் அணி இதுவரை 4 போட்டிகளில் விளையாடி 4லிலும் தோல்வியை சந்தித்துள்ளது. மகளிர் பிரீமியர் லீக் தொடரில் ஒரு வெற்றியை கூட பெறாத அணியாக பெங்களூர் திகழ்கிறது.
இந்திய துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனாவின் தலைமையில், நியூசிலாந்து கேப்டன் சோஃபி டிவைன், இங்கிலாந்து கேப்டன் ஹீதர் நைட், ஆஸ்திரேலியா ஆல்-ரவுண்டர் எலிஸ் பெர்ரி, இந்திய விக்கெட் கீப்பர் பேட்டர் ரிச்சா கோஷ் மற்றும் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ரேணுகா சிங் பெங்களூர் அணியால் வாங்கப்பட்டனர். இப்படியான பல நட்சத்திர வீரர்களை கொண்ட அணியாக இருந்தும் வெற்றி கணக்கை தொடங்கவே இல்லை.
தொடரிலிருந்து வெளியேறுகிறதா பெங்களூரு?
மகளிர் பிரீமியர் லீக் தொடரின் தற்போதைய புள்ளிகள் அடிப்படையில் கடைசி இடத்தில் பெங்களூரு அணி உள்ளது. அதேபோல், இரண்டாவது மோசமான நிகர ரன் ரேட் விகிதத்தையும் கொண்டுள்ளது. இவை அனைத்தையும் கடந்த, ஸ்மிருதி மந்தனா தலைமையிலான பெங்களூர் அணி ப்ளே ஆஃப்களுக்கு தகுதிபெற இன்னும் வாய்ப்புள்ளது என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா?
தற்போதைய லீக் போட்டிகளில் முடிவுகளை பொறுத்தவரை எந்த அணியும் ப்ளே ஆஃப்களுக்கு தகுதிபெறவில்லை. இதையடுத்து ஆர்சிபி அணி தாங்கள் விளையாடவுள்ள மீதமுள்ள நான்கு போட்டிகளிலும் வெற்றிபெற வேண்டும். மேலும், அதிகபடியான ரன் ரேட் அடிப்படையில் வெற்றிபெற்றால் கூடுதல் வசதியாக் இருக்கும். லீக் கட்டத்தில் பாதிக்கு மேல் எப்படி விளையாட வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு விளையாடினால் பெங்களூரு முதல் ப்ளே ஆஃப்களுக்கு தகுதிபெறும் மூன்று அணிகளில் ஒன்றாக வலம்பெறும்.
இந்தநிலையில், பெங்களூர் அணி இன்று டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் இன்று களமிறங்குகிறது. இந்த போட்டியில் இருந்து வெற்றி கணக்கை தொடர்ந்தால் பெங்களூரு அணிக்கு வாய்ப்பு.
புள்ளிப்பட்டியல்:
குழு | போட்டி | வெற்றி | தோல்வி | புள்ளிகள் | நிகர ரன் ரேட் |
மும்பை இந்தியன்ஸ் | 4 | 4 | 0 | 8 | +3.525 |
டெல்லி கேபிடல்ஸ் | 4 | 3 | 1 | 6 | +2.338 |
UP வாரியர்ஸ் | 4 | 2 | 2 | 4 | +0.015 |
குஜராத் ஜெயண்ட்ஸ் | 4 | 1 | 3 | 0 | -3.397 |
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் | 4 | 0 | 4 | 0 | -2.648 |
மீதமுள்ள போட்டி விவரங்கள்:
DATE | போட்டி விவரம் | நேரம் | இடம் |
மார்ச்-13 | டெல்லி கேபிடல்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் | 07:30 PM IST | DY பாட்டீல் ஸ்டேடியம் |
மார்ச்-14 | மும்பை இந்தியன்ஸ் vs குஜராத் ஜெயண்ட்ஸ் | 07:30 PM IST | பிரபோர்ன் - சிசிஐ |
மார்ச்-15 | UP வாரியர்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் | 07:30 PM IST | DY பாட்டீல் ஸ்டேடியம் |
மார்ச்-16 | டெல்லி கேபிடல்ஸ் vs குஜராத் ஜெயண்ட்ஸ் | 07:30 PM IST | பிரபோர்ன் - சிசிஐ |
மார்ச்-18 | மும்பை இந்தியன்ஸ் vs UP வாரியர்ஸ் | 03:30 PM IST | DY பாட்டீல் ஸ்டேடியம் |
மார்ச்-18 | ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs குஜராத் ஜெயண்ட்ஸ் | 07:30 PM IST | பிரபோர்ன் - சிசிஐ |
மார்ச்-20 | குஜராத் ஜெயண்ட்ஸ் vs UP Warriorz | 03:30 PM IST | பிரபோர்ன் - சிசிஐ |
மார்ச்-20 | மும்பை இந்தியன்ஸ் vs டெல்லி கேபிடல்ஸ் | 07:30 PM IST | DY பாட்டீல் ஸ்டேடியம் |
மார்ச்-21 | ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs மும்பை இந்தியன்ஸ் | 03:30 PM IST | DY பாட்டீல் ஸ்டேடியம் |
மார்ச்-21 | UP வாரியர்ஸ் vs டெல்லி கேபிடல்ஸ் | 07:30 PM IST | பிரபோர்ன் - சிசிஐ |
மார்ச்-24 | எலிமினேட்டர் | 07:30 PM IST | DY பாட்டீல் ஸ்டேடியம் |