தென் ஆப்பிரிக்கா மற்றும் இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி போட்டி கேபெர்ஹா மைதானத்தில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்க விக்கெட் கீப்பர் கைல் வெரேய்ன் கமிண்டு மெண்டிஸ் கேட்சை  டைவ் அடித்து பிடித்தது, இணையத்தில் வைரலாகி வருகிறது. 


தென்னாப்பிரிக்க தொடர்:


இலங்கை மற்றும் தென் ஆப்பிரிக்கா  அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது, இந்த தொடரின் முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி 233 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.  முதல் போட்டியின் முதல் இன்னிங்ஸ்சில் இலங்கை அணி 42 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது இலங்கை அணி. 


இதையும் படிங்க: Sunil Gavaskar : ”ஹோட்டல் ரூம்ல என்ன வேலை!” பயிற்சிக்கு போங்க.. சுளுக்கெடுத்த சுனில்


கேபெர்ஹா டெஸ்ட்: 


இவ்விரு அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி போர்ட் எலிசபெத்தில் உள்ள செயிண்ட் ஜார்ஜீயா மைதானத்தில் நடந்து வருகிறது, இப்போட்டியின் முதல் இன்னிங்ஸ்சில் தென் ஆப்பிரிக்கா அணி 358ன் ரன்களும், இலங்கை அணி 328  ரன்களும் எடுத்தது. 30 ரன்கள் என்கிற  முன்னிலையுடன் தொடங்கிய தென் ஆப்பிரிக்கா கேப்டன் டெம்பா பவுமாவின் சிறப்பான ஆட்டத்தால் 317 ரன்கள் எடுத்தது. 


வெர்ரேய்னின் கேட்ச்:


348 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இலங்கை  அணி சீராரன இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்தது, இந்த போட்டியின் முக்கியமான கட்டத்தில் தென்னாப்பிரிக்க விக்கேட் கீப்பர் கேல் வெர்ரேய்ன் அதிரடியாக விளையாடிக் கொண்டிருந்த கமின்டு மெண்டிஸ்சின் கேட்ச்சை எகிறி பிடித்து ஆட்டத்தின் போக்கை திருப்பிவிட்டார். 


 







அதன்பிறகு குசல் மெண்டிஸ் மற்றும் தனஞ்செயா டி சில்வா அணியை சரிவில் இருந்து மீட்டனர். நேற்றைய ஆட்ட நேர முடிவில் இலங்கை அணி 205 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்திருந்தது. இன்றைய இறுதி நாளில் வெற்றிக்கு இரு அணிகளுக்கும் சரிசம வாய்ப்பு உள்ளதால் இன்றைய போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.