இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா 2-0 என்ற கணக்கில் வென்று அசத்தியுள்ளது. கான்பூரில் 2 நாட்கள் மழை குறுக்கீடு செய்தபோதிலும் இந்திய அணி இரண்டரை நாட்கள் மட்டுமே விளையாடி போட்டியை வென்று அசத்தியுள்ளது.



இன்னும் எத்தனை வெற்றி தேவை?


இந்த வெற்றி இந்திய அணிக்கு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குச் செல்வதற்கு மிகவும் ஏதுவானதாக அமைந்துள்ளது. இந்த டெஸ்ட் தொடரை வென்றதன் மூலம் இந்திய அணி இனி தான் ஆட உள்ள டெஸ்ட் போட்டிகளில் 3 போட்டிகளில் வெற்றி பெற்றாலே இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியும்.


உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நடைபெறுவதற்கு முன்பு இந்திய அணி நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது. முதலில் நியூசிலாந்து அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. நியூசிலாந்து அணி இந்தியாவிற்கு எதிராக 3 டெஸ்ட் போட்டிகளில் ஆட உள்ளது.

நியூசிலாந்து, ஆஸ்திரேலியா தொடர்:


இந்த தொடர் முடிந்த பிறகு இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகளில் ஆட உள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கு முன்பாக இந்திய அணி 8 டெஸ்ட் போட்டிகளில் ஆடினாலும் இந்திய அணி 3 போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியும்.


இதன் காரணமாகவே இந்திய அணி கான்பூரில் நடந்த வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் மிகவும் அதிரடியாக ஆடி வெற்றி பெற்றது. இந்த வெற்றி இந்திய அணிக்கும் இந்திய ரசிகர்களுக்கும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒவ்வொரு போட்டியும் சவால்:


ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடர் இந்திய அணி சவால் மிகுந்ததாக அமையும் என்பதால், இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் தனது முழு திறனையும் காட்டி வெற்றி பெற முனைப்பு காட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம், நியூசிலாந்து அணியும் வலுவான அணி என்பதால் இந்திய அணிக்கு எதிரான அவர்களது ஆட்டமும் சவாலானதாக அமையும் என்று கருதலாம்.


இந்தியா – ஆஸ்திரேலியா மோதும் பார்டர் கவாஸ்கர் கோப்பை இரு அணிகளுக்கும் சவால் ஆனதாக அமையும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. அதேசமயம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்பதால் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, இலங்கை, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து ஆகிய அணிகளும் மிகவும் போராடும் என்பதால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நடைபெறுவதற்கு முன்பான ஒவ்வொரு அணிகளின் டெஸ்ட் போட்டியும் சவாலானதாக மட்டுமின்றி மற்ற அணிகளின் வாய்ப்பையும் மாற்றக்கூடியதாக அமையும் என்பதால் மிகவும் விறுவிறுப்பானதாக ஒவ்வொரு போட்டியும் மாறியுள்ளது.