ஐசிசி உலகக் கோப்பை தொடர் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. அதன்படி, இன்றைய போட்டி உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.
29-வது லீக் போட்டியன இந்த போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் விளையாடி வருகின்றன.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதனபடி, முதலில் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 229 ரன்கள் எடுத்தது.
பின்னர், 230 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 10 ஓவர்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
பந்து வீச்சில் கலக்கிய பும்ரா-ஷமி:
இதில் 5 வது ஓவரை வீசிய ஜஸ்பிரித் பும்ரா 5 வது ஓவரின் ஐந்தாவது பந்தில், டேவிட் மாலன் விக்கெட்டை எடுத்தார். அதேபோல், அவர் வீசிய கடைசி பந்தில் ஜோ ரூட் ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் முறையில் நடையைக் கட்டினார். மார்க் வூட் விக்கெட்டையும் பும்ரா தான் எடுத்தார்.
அதேபோல் , மறுபுறம் பென் ஸ்டோக்ஸ், மொயின் அலி, ஜானி பேர்ஸ்டோவ், அடில் ரஷித் விக்கெட்டை முகமது ஷமி கைப்பற்றினார்.