ஒருநாள் உலகக் கோப்பை 2023 போட்டியானது இம்முறை இந்தியாவில் நடத்தப்பட உள்ளது. இதற்கான ஆயத்த பணிகளை பிசிசிஐ மற்றும் ஐசிசி தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
இந்தநிலையில், இந்தியாவில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கோப்பை போட்டிக்கான மைதானங்களின் பட்டியல் இறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், விரைவில் இது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி, அகமதாபாத், லக்னோ, மும்பை, டெல்லி மற்றும் கொல்கத்தா உள்ளிட்ட 9 மைதானங்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
எந்தெந்த மைதானங்கள்..?
உலகக் கோப்பையை நடத்துவதற்கான மைதானங்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. கிரிக்இன்ஃபோவின் செய்தியின்படி, உலகக் கோப்பைக்கான 9 நகரங்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அகமதாபாத், சென்னை, லக்னோ, மும்பை, பெங்களூரு, டெல்லி, கொல்கத்தா, புனே, தர்மஷாலா ஆகியவை இதில் அடங்கும். ஆனால், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஹைதராபாத் கிரிக்கெட் மைதானத்திற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
2023 உலகக் கோப்பையில் இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போட்டி அக்டோபர் 15ஆம் தேதி நடைபெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளது . உலகக்கோப்பைப் போட்டி அக்டோபர் 8 ஆம் தேதி தொடங்கலாம். போட்டியின் முதல் போட்டி சென்னையில் நடைபெற உள்ளது. அதே சமயம், அக்டோபர் 11-ம் தேதி, இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே ஒரு போட்டி நடைபெறலாம். புனே, தர்மஷாலா, லக்னோ மற்றும் மும்பையிலும் இந்தியாவின் போட்டிகள் திட்டமிடப்பட்டுள்ளன.
உலகக் கோப்பை போட்டியில் எதிர்பார்க்கப்படும் மைதானம்:
# | மைதானம் | பார்வையாளர்கள் திறன் | நகரம் |
---|---|---|---|
1 | எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியம் | 50000 | சென்னை |
2 | நரேந்திர மோடி மைதானம் | 132000 | அகமதாபாத் |
3 | விதர்பா கிரிக்கெட் சங்க மைதானம் | 45000 | நாக்பூர் |
4 | அருண் ஜெட்லி மைதானம் | 41842 | டெல்லி |
5 | எம்.சின்னசாமி ஸ்டேடியம் | 40000 | பெங்களூர் |
6 | பஞ்சாப் கிரிக்கெட் சங்க மைதானம் | 27000 | மொஹாலி |
7 | வான்கடே மைதானம் | 33500 | மும்பை |
8 | ஈடன் கார்டன்ஸ் | 68000 | கொல்கத்தா |
9 | இமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்க ஸ்டேடியம் | 23000 | தர்மஷாலா |
2023 உலகக் கோப்பை அணி பட்டியல்
மே 10, 2023 நிலவரப்படி, மொத்தம் 8 அணிகள் இப்போது ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2023 இன் பிரதான சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.
- இந்தியா
- இங்கிலாந்து
- நியூசிலாந்து
- ஆஸ்திரேலியா
- வங்கதேஷம்
- பாகிஸ்தான்
- தென்னாப்பிரிக்கா
- ஆப்கானிஸ்தான்
ஒருநாள் உலகக் கோப்பை வென்ற அணிகள் பட்டியல்:
ஆஸ்திரேலிய அணி இதுவரை 5 முறை கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டு முறை ஐசிசி உலகக் கோப்பை வென்றுள்ளன. அதேபோல், இந்திய அணி 1983 மற்றும் 2011ம் ஆண்டு என இரண்டு முறை கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்றுள்ளது. மேலும், கடந்த 2003 ம் ஆண்டு இரண்டாம் இடத்தைப் பிடித்தது.
பாகிஸ்தான், இலங்கை, இங்கிலாந்து ஆகிய அணிகள் தலா உலகக் கோப்பையை வென்றுள்ளன.